மைதா மாவு - 100 கிராம்,
சர்க்கரை - 50 கிராம்,
வெண்ணெய் - 50 கிராம்,
ஆரஞ்சுப் பழச்சாறு - 1/2 கப்,
பேகிங் பவுடர் - 1/2 டீஸ்பூன்,
உப்பு - 1 சிட்டிகை.
எப்படிச் செய்வது?
மைதா, பேகிங் பவுடரை சலித்து பொடித்த சர்க்கரை, உப்பு, வெண்ணெய் சேர்த்து நன்கு கலக்கவும். ஆரஞ்சுப் பழச்சாறு கலந்து நன்கு மிருதுவாக பிசைந்து பிஸ்கெட் கட்டரால் கட் செய்து 180 டிகிரியில் 20 நிமிடம் மைக்ரோவேவ் அவனில் பேக் செய்யவும்.