Author Topic: ~ ஓட்ஸ் - பருப்பு - கஞ்சி! ~  (Read 429 times)

Offline MysteRy

~ ஓட்ஸ் - பருப்பு - கஞ்சி! ~
« on: January 05, 2014, 05:48:17 PM »
ஓட்ஸ் - பருப்பு - கஞ்சி!



என்னென்ன தேவை?
பயத்தம் பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்,
ஓட்ஸ் - 2 டேபிள்ஸ்பூன்,
சின்ன வெங்காயம் - 6,
தக்காளி - 1,
பச்சை மிளகாய் - 1,
கொத்தமல்லி மற்றும் புதினா - தலா 1 கைப்பிடி,
இஞ்சி- பூண்டு விழுது - அரை டீஸ்பூன்,
கரம் மசாலா தூள் - கால் டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப,
நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?
பயத்தம் பருப்பை குக்கரில் வேகவைக்கவும். அதில் தண்ணீர் விட்டு, ஓட்ஸை போட்டுக் காய்ச்சவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, சின்ன  வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது போட்டு வதக்கவும். பிறகு பச்சை மிளகாய், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள்,  தக்காளி, உப்பு போட்டு நன்கு  வதக்கவும். புதினா, கொத்தமல்லி சேர்க்கவும். நன்கு வதங்கியதும் ஓட்ஸ் பருப்புக் கலவையை இதில் சேர்க்கவும். சூப்பர் ஓட்ஸ் கஞ்சி ரெடி!   ஃபிட்டான உடலுக்குப் பொலிவூட்டும் சருமத்துக்கு ஏற்றது. இது ஒரு சத்தான உணவு... சரிவிகித உணவு.