என்னென்ன தேவை?
மைதா மாவு - 1 கப்,
பால் - 1/2 கப்,
செவ்வாழை - 1,
சர்க்கரை - 1/2 கப்,
ஏலக்காய் தூள் - 1 சிட்டிகை,
உப்பு - சிறிதளவு,
எண்ணெய் - தேவைக்கு,
பச்சை வாழைப்பழம் (அலங்கரிக்க) - 1.
எப்படிச் செய்வது?
பாலில் சர்க்கரை, உப்பு, ஏலக்காய் தூள், மைதா, மசித்த செவ்வாழை சேர்த்து கெட்டியாகக் கலக்கவும். தோசைக் கல்லில் எண்ணெய் தடவி சற்று கனமான தோசையாக ஊற்றவும். வாழைப்பழத்தை வட்ட வட்டமாக நறுக்கி மேலே வைத்து அடுக்கி கீழே வெந்தவுடன் திருப்பிப் போட்டு சுட்டு எடுக்கவும்.