Author Topic: ~ வெண்டைக்காய் பஞ்சு தோசை ~  (Read 406 times)

Offline MysteRy

வெண்டைக்காய் பஞ்சு தோசை 



தேவையானவை:
 புழுங்கல் அரிசி - ஒன்றரை கப், துவரம்பருப்பு - கால் கப், வெண்டைக்காய் - 100 கிராம், காய்ந்த மிளகாய் - 2, பெருங்காயம் - சிறிதளவு, துருவிய கேரட் - 2 டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்துமல்லி - ஒரு டேபிள்ஸ்பூன், பேரீச்சை, பாதாம் - தலா 4.

செய்முறை:
அரிசி, துவரம்பருப்புடன், காய்ந்த மிளகாயையும் சேர்த்து ஊறவைக்கவும். ஊறியதும், இதனுடன் வெண்டைக்காய்த் துண்டுகள், பெருங்காயம் சேர்த்து அரைத்து மூன்று மணி நேரம் புளிக்கவிடவும். சிறிது எண்ணெயில் கடுகு, சீரகம் தாளித்து மாவில் கொட்டி, பேரீச்சை, பாதாமை பொடியாக நறுக்கிப் போட்டு, தோசையாக வார்க்கவும். பஞ்சுபோல் மிருதுவான தோசை ரெடி!

பலன்கள்:
 வயிறு மற்றும் குடலை சீர் செய்யும் சிறந்த உணவு. மலச்சிக்கல், பசி மந்தத்தைப் போக்கும். வயிற்றுப் புண், புளி ஏப்பம் நாளடைவில் நீங்கும். மாதவிடாய்க் கோளாறுகளைச் சீர்செய்து, அதிக உதிரப் போக்கினைத் தடுக்கும். குறைந்த கலோரி உணவு என்பதால் உடல் எடை குறையும்.