Author Topic: ~ ஈசியா செய்யலாம் பொடேட்டோ ஆம்லெட்! ~  (Read 402 times)

Offline MysteRy

ஈசியா செய்யலாம் பொடேட்டோ ஆம்லெட்!



இப்படி காலை உணவை பற்றி கவலைப்படாமல் எஸ்கேப்பாகும் மக்களின் நலனுக்காக எளிமையான பொடேட்டோ ஆம்லெட்டை பிரேக் பாஸ்ட்டுக்கு செய்து பாருங்கள். நேரமாகிறது என்று சொல்பவர் கூட, நிதானமாக சாப்பிட்டு செல்வார்கள்.

தேவையானவை

உருளைக்கிழங்கு - 1
முட்டை - 3
கொத்தமல்லி - சிறிது
மஞ்சள் தூள் - சிறிது
பச்சை மிளகாய் - தேவைகேற்ப
உப்பு/ எண்ணெய் - தேவைகேற்ப

செய்முறை

முட்டையை நன்றாக அடித்துக்கொள்ளுங்கள்.

ஒரு பாத்திரத்தில் நன்றாக அடித்த முட்டை, நறுக்கிய கொத்தமல்லி, பச்சை மிளகாய், மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து கலக்குங்கள்.

உருளைக்கிழங்கை சிரிது நேரம் தண்ணீரில் சிறிது உப்புடன் ஊறவைத்து ‌பிறகு அதை துருவி நீரில் வேக வைத்தப்பிறகு, அதை முட்டை கலவையாக  சேர்த்து கலக்கி ஆம்லெட்டுகளாக ஊற்றி சூடாக பரிமாறுங்கள்.