Author Topic: பிரிவின் வலி!  (Read 526 times)

Offline sameera

பிரிவின் வலி!
« on: December 27, 2013, 11:41:17 AM »
உந்தன் அன்பாலே நான் காதல் கொண்டேனே,
விரல் கோர்த்து உன்னுடன் பயணம் கொண்டேனே..,
வாழ்க்கை துணையாய் நினைத்து..,
என் மனதில் கொண்டேனே...
வழி துணையாகி சென்றுவிட்டாயே...!

இங்கே என்னை தனிமையில் வீழ்த்தி சென்றாயே...
உன்னோடு பழகிய நேரம் தான் இனிமையோ..,
உனது பேச்சிலும் செய்கைகலினும் இன்பம் கண்டேனடா...,
உன் மௌனத்தின் மொழிகள் மட்டும் இன்று என் சொந்தமடா!

உயிருடன் கலந்துல்லாயடா!
காலை பொழுதில் உறங்கிட,
மாலை பொழுதில் நினைவு கொண்டிட,
என் தலையணையிலும் உன்னை செதுக்கியுல்லேனடா..,
படுக்கையிலும் உன் நினைவாலே ஈரம் கொண்டேனடா..!

என் அன்பே!
இது தான் காதலா?
உயிருடன் மோதலா?
விழியன் சாரலா?
உன்னால் எனக்கு காயங்களா?
என்னால் உனக்கு பாவங்களா?!

அன்புள்ள கள்வனே,,,
              என்னில் உன்னை பிரித்து சென்றாயடா...!!!

Offline Maran

Re: பிரிவின் வலி!
« Reply #1 on: December 27, 2013, 12:14:09 PM »
சமீரா தோழி

யார் அந்த கள்வன்  :) :) குறிப்பிடவில்லையே  :)  :)

காதல் வலி (பிரிவின் வலி!) கவிதை நன்றாக இருந்தது.



Offline sameera

Re: பிரிவின் வலி!
« Reply #2 on: December 27, 2013, 02:12:41 PM »
அப்படி யாரும் இருந்தாதானே குறிப்பிடுவதற்கு தோழா??
வாழ்த்தியமைக்கு நன்றி!