Author Topic: பப்பாளி தோசை  (Read 444 times)

Offline kanmani

பப்பாளி தோசை
« on: December 22, 2013, 11:50:29 AM »
என்னென்ன தேவை?

தோசை மாவு - 2 கப்,
பப்பாளி - 1 துண்டு,
பச்சை மிளகாய் - 2,
சீரகம் - 1/4 டீஸ்பூன்,
இஞ்சி - 1 துண்டு,
வெங்காயம் - 1,
கொத்தமல்லி - சிறிதளவு,
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப.
எப்படிச் செய்வது?

பப்பாளியின் விதைகள், தோல் நீக்கி சதைப் பகுதியை மட்டும் எடுத்து பச்சை மிளகாய், இஞ்சி, சீரகம் சேர்த்து அரைத்து மாவுடன் கலந்து, உப்பு சேர்த்து, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி போட்டு தோசையாக வார்க்கவும். பொன்னிறமாக சுட்டு எடுக்கவும்.