என்னென்ன தேவை?
நாவல் பழம் - 1/4 கிலோ,
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்,
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்,
பெருங்காயம் - 1 சிட்டிகை,
கடுகு - தாளிக்க,
நல்லெண்ணெய் - 100 கிராம்,
உப்பு - தேவைக்கு,
வெல்லம் - 1 துண்டு.
எப்படிச் செய்வது?
கடாயில் வெந்தயத்தையும் பெருங்காயத்தையும் வறுத்து பொடி செய்யவும். நாவல் பழத்தின் தோல், விதை நீக்கி சதைப் பகுதியை மிக்ஸியில் அரைக்கவும். கடாயில் நல்லெண்ணெயை விட்டு, கடுகு தாளித்து, மிளகாய் தூள் போட்டு மிதமான தீயில் வதக்கி, நாவல் பழக் கலவையையும் போட்டு நன்கு கிண்டி, உப்பைச் சேர்க்கவும். இறக்கும் முன் வெந்தயம், பெருங்காயைத் தூளைச் சேர்த்து, வெல்லத்தையும் சேர்த்து இறக்கவும். சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றது.