Author Topic: கேரட் ஐஸ்கிரீம்  (Read 419 times)

Offline kanmani

கேரட் ஐஸ்கிரீம்
« on: December 20, 2013, 11:29:27 AM »
என்னென்ன தேவை?

பிஸ்தா பருப்பு - 8
வெனிலா எசன்ஸ் - 1/4 டீஸ்பூன்
கேரட் - 4
பால் - 1 கப்
சர்க்கரை - 1/4 கப்
மஞ்சள் பொடி அல்லது ஃபுட் கலர்- 1/2 சிட்டிகை
எப்படி செய்வது?

கேரட்டை தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி, ஆவியில் வேகவைத்து ஆறியதும் மிக்ஸியில் அரைத்தெடுக்கவும். இந்த விழுதுடன் சர்க்கரை  சேர்த்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி (அடிப்பிடிக்காமல்) நன்கு சூடுவந்ததும் அதில் பாலையும் சேர்த்து கலக்கவும். ஆறியதும் வெனிலா எசன்ஸ், ஃபுட்  கலர் சேர்த்து கலக்கி ஃப்ரீஸரில் வைக்கவும். அரைமணி நேரம் கழித்து எடுத்து மிக்ஸியில் போட்டு, ஒரு சுற்று சுற்றி  அதில் ஒன்றிரண்டாகப்  பொடித்த பிஸ்தா பருப்பையும் சேர்த்து கப்புகளில் ஊற்றி மீண்டும் ஃப்ரீஸரில் வைத்து ஐஸ்கிரீம் ஆனதும் எடுத்து பரிமாறலாம்.