என்னென்ன தேவை?
கோதுமை - 1 கப்
பால் - 2 கப்
ஏலக்காய்த்தூள் - 2 ஸ்பூன்
முந்திரிப்பருப்பு - 10
சர்க்கரை - 6 கப்
கேசரி பவுடர் - ஒரு சிட்டிகை
நெய் - 2 கப்
எப்படி செய்வது?
கோதுமையை முதல்நாளே ஊறவைக்கவும். மறுநாள் கிரைண்டரில் போட்டு அரைத்த தூய்மையான வெள்ளைத்துணி அல்லது வடிகட்டியில் போட்டு பிழிந்து பால் எடுத்து கொள்ளவும். ஒரு அடிகனமான வாணிலியில் 6 கப் சர்க்கரையைப் போட்டு அது மூழ்கும் வரை நீர் ஊற்றி ஒற்றை கம்பி பதத்தில் பாகு காய்ச்சிக் கொள்ளவும். ஆட்டிஎடுத்த கோதுமைப் பாலையும், சாதாரண பாலையும் பாகுடன் சேர்த்துக் கிளறவும். நன்றாக கெட்டியாகக் கிளறி அகலமான தட்டில் கொட்டி முந்திரி தூவி அலங்கரிக்கவும். சுவையான கோதுமை அல்வா ரெடி.