Author Topic: ~ குழந்தைக்கு உதவும் இயற்கை மருந்து:- ~  (Read 554 times)

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227430
  • Total likes: 29057
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
குழந்தைக்கு உதவும் இயற்கை மருந்து:-




காலையில் குழந்தைகள் கண் விழித்தவுடன் ஒரு சொட்டு தேனை நாக்கில் தடவவும். தேன் உடல் வளர்ச்சிக்கு இயற்கை அளித்த ஓர் அற்புதமான வரப்பிரசாதம். பொதுவாகவே வசம்பு போடுவதால் குழந்தைக்கு நாக்கு தடித்து சீக்கிரம் பேச்சு வராமல் இருக்கும் என்பார்கள். ஆனால், தேன் தடவுவதால் நாக்கு புரண்டு விரைவில் பேச்சு வரும்.

சில குழந்தைகள் அடிக்கடி வாந்தி எடுக்கும். அதற்கு வேப்பார்க்குத்துளி, அரை மிளகு, ஒரு சீரகம், ஒரு ஸ்பூன் ஓமம், ஒரு பல் பூண்டு இவற்றை அம்மியில் தட்டி துளி வெந்நீர் விட்டுப் பிழிந்து வடிக்கட்டி ஊற்றினால் வாந்தி சட்டென்று நின்றுவிடும். நாட்டு மருந்துக் கடையில் மாசிக்காய் என்று கிடைக்கும். அதை வாங்கி சாதம் வேகும்போது, அதோடு போட்டு எடுத்து உலர்த்தி வைத்துக் கொள்ளவும். குழந்தையைக் குளிப்பாட்டும் போது, நாக்கில் தடவி வழித்தால் நாக்கில் உள்ள மாவு அகன்று குழந்தை ருசித்துப் பால் சாப்பிடும்.

தினமும் இரவில் விளகேற்றியவுடன் சுட்ட வசம்பைக் கல்லில் உரைத்து குழந்தைக்கு ஒரு சங்கு குடிக்கக் கொடுத்து, சிறிது தொப்புளைச் சுற்றி தடவுங்கள். பின் ஒரு வெற்றிலையில் எண்ணெய் தடவி அதை விளக்கில் காட்டி வாட்டி, பொறுக்கும் சூட்டில் அந்த இலையை குழந்தையின் தொப்புள் மேல் போட்டால் அசுத்த காற்றெல்லாம் வெளியேறி, வயிறு உப்புசம் இல்லாமல் இருக்கும்!

குழந்தை தினமும் இரண்டு, மூன்று முறை மலங்கழிக்க வேண்டும். இல்லாமல் கஷ்டப்பட்டால், முதலில் ஒரு பாலாடை வெந்நீர் புகட்டிப் பார்க்கவும். அப்படியும் போகவில்லை என்றால் ஐந்தாறு விதையில்லாத உலர்ந்த திராட்சைகளை வெந்நீரில் ஊறப்போட்டு கசக்கிப் புகட்டினால் ஒரு மணி நேரத்தில் போய்விடும். மலங்கட்டி அவஸ்தைப்பட்டால் விளக்கெண்ணையோ, வேறு மருந்துகளோ தர வேண்டாம். ஆசனவாயில் வெற்றிலைக் காம்போ சீவிய மெல்லிய சோப் துண்டோ வைத்தாலே போய்விடும்.

பிறந்த குழந்தைக்கு தலைக்கு ஊற்றியதும், கால் கஸ்தூரி மாத்திரையை தாய்ப்பாலில் கரைத்து ஊற்றினால் சளிப்பிடிக்காது. ஒவ்வொரு மாதமும் கால், கால் மாத்திரையாக அளவைக் கூட்டிக் கொள்ளலாம். ஒரு வயதுக்கு மேல் துளசி, கற்பூரவல்லி இலைகளை வெந்நீரில் கொதிக்க வைத்து வடிகட்டிக் கொடுத்தால் சளிப் பிடிக்காது, இருந்தாலும் அகன்று விடும். குழந்தைகளுக்கு பேதிக்குக் கொடுப்பது எண்ணெய் தேய்த்து ஊற்றுவது, காதில் மூக்கில் எண்ணெய் விடுவது இதை அறவே தவிர்த்து விடவும்.

குழந்தைக்கு சளி பிடித்து இருந்தால் தேங்காய் எண்ணெயை சுடவைத்து, பூங்கற்பூரம் போட்டு உருக்கி, ஆற வைத்துத் தடவினால் போதும், சளி இளகிக் கரைந்து விடும்.தினமும் குடிக்க காலையும், மாலையும் இரண்டிரண்டு சங்கு வெந்நீர் கொடுங்கள். குழந்தையின் உடம்பு கலகலவென்று இருக்கும்

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227430
  • Total likes: 29057
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
குழந்தைக்கு உதவும் இயற்கை மருந்து:-




ஒவ்வொருத்தர் வீட்டிலும் முதல் (பணம்) இருக்கிறதோ இல்லையோ கண்டிப்பாக ஒரு முதலுதவி பெட்டி இருக்க வேண்டும். அதில் காய்ச்சல் தலைவலி தீடீரென்று ஏற்படும் வெட்டுக்காயம், தீக்காயம், அல்லது குழந்தைகள் குறும்பாக விளையாடும் போது ஏற்படும் காயங்கள் போன்றவற்றிற்கு தேவையான மருந்து மாத்திரைகள் பேண்ட்எய்ட், காட்டன், தைலம், ஆயின்மெண்ட், டிங்சர், டெட்டால், ஆன்டிபயாடிக் பவுடர் போன்றவற்றை வைத்திருத்தல் அவசியம்.

குழந்தைகள் இருக்கும் வீட்டில் குழந்தையை பாதுகாப்பாக பார்த்துக்கொள்ள வேண்டும். ஆதலால் வீட்டிலுள்ள பினாயில், பூச்சி மருந்து, எறும்புப் பொடி, போன்றவற்றை, குழந்தைகளுக்கு எட்டாத இடத்தில் வைக்க வேண்டும். குழந்தைகளுக்கு பூச்சி ஏதேனும் கடித்து, கடித்த இடத்தில் பரவிய விஷத்தை நீக்க உடனடியாக வெங்காயத்தை நறுக்கி தேய்த்தால் விஷம் இறங்கும்.

தேனீ கொட்டிவிட்டால் எருக்கம் பாலைக் கடிவாயில் வைத்தால் வலியின் தன்மை குறையும். பாம்பு போன்ற விஷப்பூச்சிகள் கடித்து விட்டால் கடித்த இடத்திற்கு மேலும் கீழம் ஒரு ஈரத்துணி அல்லது கயிறை வைத்து நன்கு இறுக்கமாக கட்டி பிறகு மருத்துவரை அணுகி சிகிச்சை அளிக்கவும்.

குளவி கொட்டிவிட்டால் அந்த இடத்தை தண்ணீரால் நன்கு கழுவிய பின் காலமைன் லோஷனைத் தடவினால் வலி குறையும். காலில் அட்டைப்பூச்சி ஒட்டிக்கொண்டால் அதன் மேல் சிறிது உப்பையோ, புகையிலையோ போட்டால் பூச்சி உடனே கீழே விழுந்து விடும்.