Author Topic: அரிசி மாவு செரட்டை புட்டு  (Read 498 times)

Offline kanmani

என்னென்ன தேவை?

அரிசி மாவு - 2 கப்,
பொடித்த வெல்லம் - 1 கப்,
ஏலக்காய் தூள்-  டீஸ்பூன்,
உப்பு ஒரு சிட்டிகை,
நெய் - சிறிது.
துருவிய தேங்காய் - 1 கப்.
எப்படி செய்வது? 

பதப்படுத்திய புட்டு மாவு இப்போது ரெடிமேட் ஆகவும் கிடைக்கிறது. 2 கப் மாவு எடுத்து ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து தண்ணீரில் கரைத்து கொஞ்சம்  கொஞ்சமாக மாவில் தெளித்து பிசிறி ரவைபோல்  செய்துகொள்ளவும். தேங்காய் துருவலுடன், பொடித்த வெல்லம், ஏலக்காய் தூள் கலந்து வைத்துக்  கொள்ளவும். கண் உள்ள தேங்காய் செரட்டையை சுத்தம் செய்து ஒரு ஓட்டைப் போட்டு நெய் தடவி பிசிறி வைத்த மாவில் இருந்து ஒரு கைபிடி  போடவும். பின் அதன் மேல் தேங்காய், வெல்லம் கலவையைப் போடவும். அதற்கு மேல் மீண்டும் அரிசி மாவை போடவும். ஒரு குக்கரில் தண்ணீர்  விட்டு மூடி போட்டு  செரட்டையை வைத்து ஸ்டீம் செய்யவும். செரட்டை புட்டு ரெடி.