Author Topic: ~ அன்னாசி அல்வா ~  (Read 397 times)

Offline MysteRy

~ அன்னாசி அல்வா ~
« on: November 29, 2013, 06:21:47 PM »
அன்னாசி அல்வா



தேவையானவை:
பழுத்த அன்னாசி பழம் - பாதி அளவு, சர்க்கரை - ஒன்றரை கிலோ, மைதா - 300 கிராம், முந்திரி - 50 கிராம், ஏலக்காய்த்தூள், சீவிய பாதாம்,  மஞ்சள் ஃபுட் கலர் - சிறிதளவு, நெய் - 300 கி.

செய்முறை:
அன்னாசியை தோல் சீவி, ஒரு சிறிய துண்டு மட்டும் தனியாக எடுத்து வைக்கவும். மற்ற துண்டுகளை அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும். தனியே எடுத்து வைத்த அன்னாசி துண்டை பொடியாக நறுக்கவும்.
மைதாவை நன்கு பிசைந்து மூழ்கும் அளவுக்கு நீர் ஊற்றி ஓர் இரவு வைத்து, மறுநாள் நீரை வடித்துவிட்டு, கீழே படிந்துள்ள மாவில் மீண்டும் நீர் ஊற்றிக் கலக்கவும். சர்க்கரையுடன் தேவையான அளவு நீர் ஊற்றி பாகு காய்ச்சவும். ஒற்றை கம்பி பதம் வந்ததும், கலக்கிய மைதாவை அதில் சேர்த்துக் கிளறவும். இடையிடையே நெய், ஃபுட் கலரை சிறிது சிறிதாக சேர்க்கவும். ஒன்றி வரும்போது அன்னாசி சாறு ஊற்றி, ஏலக்காய்த்தூள், அன்னாசி துண்டுகளை சேர்த்துக் கிளறவும். ஒட்டாத பதம் வந்ததும் முந்திரியை வறுத்துச் சேர்க்கவும்.  சீவிய பாதாம் கொண்டு அலங்கரிக்கவும்.