என்னென்ன தேவை?
பீட்ரூட் - 1 துண்டு,
கேரட் - 1 துண்டு,
பச்சை மிளகாய் - 1,
சீரகம் - அரை டீஸ்பூன்,
உப்பு - சிறிது,
புதினா - 10 இலைகள்,
தயிர் - 2 டம்ளர்,
அலங்கரிக்க - புதினா, ஐஸ் கட்டிகள்.
எப்படிச் செய்வது?
பீட்ரூட், கேரட், பச்சை மிளகாய், சீரகம், உப்பு, புதினா எல்லாவற்றையும் அரை டம்ளர் தயிர் விட்டு நன்கு அரைக்கவும். பிறகு அதில் மீதமுள்ள ஒன்றரை டம்ளர் தயிர் விட்டு, சிறிது தண்ணீர் சேர்த்து மறுபடி நன்கு அடிக்கவும். ஐஸ் கட்டிகள் சேர்த்து, மேலே புதினா தூவிப் பரிமாறவும்.