Author Topic: ~ சில பூக்களின் மருத்துவ குணங்கள்:- ~  (Read 382 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227427
  • Total likes: 29056
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
சில பூக்களின் மருத்துவ குணங்கள்:-




பொதுவாக காய்களையும், கனிகளையும் உட்கொள்ளும் நாம், காய், கனி உருவாவதற்கு காரணமான பூக்களை உணவில் சேர்த்துக் கொள்வதில்லை.

அப்படி நாம் ஒதுக்கிவிட்ட பூக்களுக்கு உள்ள மருத்துவக் குணங்களைப் இப்போது பார்ப்போம்.

முருங்கைப் பூ

கண்கள் குளிர்ச்சி பெறும். உடல் உறுப்புகள் சீரான முறையில் வளர்ச்சியடையும். அதிகமான பித்தத்தை போக்கும்.

வாழைப் பூ

கை, கால் எரிச்சல், இருமல், வயிற்றுக் கடுப்பு, வெள்ளை ஒழுக்கு போன்ற பிரச்சனைகளை நிவர்த்தி செய்யும்.

மாதுளம் பூ

பித்த வாந்தியை நிறுத்தும் தன்மை கொண்டது. வயிற்றுக் கடுப்பு, இரத்த மூலம், உஷ்ணம் ஆகியவற்றைச் சீர் செய்யும். இது தவிர, மாதுளம் பழத்தோல் சீதபேதி, வாய்ப்புண், இரத்த பேதி போன்றவற்றிற்கு மருந்தாகும்.

அகத்திப் பூ

வெயில் காரணமாக ஏற்படும் பித்தத்தை அகற்றும். உடல் அழற்சியை விலக்கும்.

வேப்பம் பூ

நீடித்த ஏப்பம், வாந்தி, குடற்பூச்சிகள் ஆகியவற்றை அகற்றும்.

புளியம் பூ

புளியம் பூவைச் சமையலுக்குப் பயன்படுத்தினால் பித்தம் அகலும். நாவின் சுவையின்மை நீங்கும்.

வெங்காயப் பூ

குன்ம நோய்களை போக்கும், குடல் தொடர்பான பல பிணிகளை நீக்கும்.

பன்னீர்ப் பூ

மித வாந்தியை நிறுத்தும், வயிற்று இசிவு, விந்துக்குறை, காய்ச்சல், வறட்சி, ஒக்காளம் போன்றவற்றை நீக்கும்.