Author Topic: பாசிப்பருப்பு மாம்பழ அல்வா  (Read 478 times)

Offline kanmani

தேவையான பொருட்கள்:

மாம்பழத் துண்டுகள் - 1 கப்
முந்திரி - 10
திராட்சை - 10
உருக்கிய நெய் - 1/4 கப்
பாசிப்பருப்பு - 1/4 கப்
மண்டை வெல்லம் - 100 கிராம் (துருவியது)
தண்ணீர் - 1 கப்
தேங்காய் துருவல் - 1/4 கப்
வறுத்த பச்சரிசி மாவு - 2 ஸ்பூன்

செய்முறை:

* வாணலியில் நெய் 6 ஸ்பூன் ஊற்றி சூடானவுடன் முந்திரி, திராட்சையைப் போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

* பிறகு அந்த நெய்யிலேயே பாசிப்பருப்பைச் சேர்த்து வதக்கி, 1 கப் தண்ணீர் சேர்த்து மலர வேக வைத்துக் கொள்ளவும்.

* மற்றொரு வாணலியில் 2 ஸ்பூன் நெய் ஊற்றி, தேங்காய்த் துருவல் சேர்த்து வதக்கி, அது பொன்னிறமானவுடன், வேகவைத்த பாசிப்பருப்பைக் கொட்டிக் கிளறி, மாம்பழத் துண்டுகளையும் சேர்த்து அளவான தீயில் கிளறிக் கொண்டே இருக்கவும்.

* 1 ஸ்பூன் தண்ணீர், வெல்லப்பாகு - 1/2 கப் சேர்த்துக்கிளறி, 2 நிமிடம் கழித்து பச்சரிசி மாவு தூவிக்கிளறி, கலவை கெட்டியாகி அல்வாப்பதம் வந்தவுடன் 1 ஸ்பூன் நெய், முந்திரி, திராட்சை சேர்த்துக் கலக்கி ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்து சூடாகப் பரிமாறவும்.