Author Topic: புழுங்கல் அரிசி உப்புமா  (Read 565 times)

Offline kanmani


    புழுங்கல் அரிசி - ஒரு கப்
    கடலைப்பருப்பு - அரை மேசைக்கரண்டி
    கடுகு - அரை தேக்கரண்டி
    உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
    புளி - பெரிய நெல்லிக்காய் அளவு
    தேங்காய் துருவல் - ஒரு கப்
    பெருங்காயம் - குண்டு மணி அளவு
    நல்லெண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
    தேங்காய் எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
    மிளகாய் வற்றல் - 4
    கறிவேப்பிலை - 2 கொத்து
    கல் உப்பு - முக்கால் மேசைக்கரண்டி

    

தேவையான பொருட்களைத் தயாராக எடுத்துக் கொள்ளவும். மிளகாய் வற்றலை இரண்டாக பிய்த்துக் கொள்ளவும்.
   

அரை கப் தண்ணீரில் புளியைக் கரைத்து எடுத்துக் கொள்ளவும்.
   

ஒரு பாத்திரத்தில் புழுங்கல் அரிசியைப் போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 3 மணி நேரம் ஊற வைக்கவும்.
   

ஊறியதும் அரிசியைக் கழுவி க்ரைண்டரில் போட்டு, மிளகாய் வற்றல், உப்பு மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும்.
   

அரைத்த கலவையுடன் புளிக்கரைசலை ஊற்றி கலந்து கொள்ளவும்.
   

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
   

அதனுடன் அரைத்த கலவையை ஊற்றி மேலே தேங்காய் எண்ணெயை ஊற்றி கிளறிவிட்டு மிதமான தீயில் வைத்து மூடிவிடவும். 2 நிமிடங்கள் கழித்து திறந்து ஒரு முறை கிளறிவிடவும்.
   

மீண்டும் 2 நிமிடங்கள் கழித்து திறந்து கிளறிவிட்டு மேலே அரை மேசைக்கரண்டி தண்ணீர் தெளித்து நன்கு கிளறவும். (இடையிடையே திறந்து கிளறிவிடவும்). 10 நிமிடங்கள் நன்கு வெந்ததும் இறக்கி வைக்கவும்.
   

சுவையான புழுங்கல் அரிசி உப்புமா தயார்.