Author Topic: பொன்னாங்கண்ணி ரைஸ்  (Read 595 times)

Offline kanmani

பொன்னாங்கண்ணி ரைஸ்
« on: November 17, 2013, 11:13:01 PM »
பொன்னாங்கண்ணி ரைஸ்


என்னென்ன தேவை?

பொன்னாங்கண்ணிக் கீரை - ஒரு கப்,
சின்ன வெங்காயம் - 10,
பச்சை மிளகாய் - 2,
உப்பு - தேவைக்கேற்ப,
தேங்காய்த் துருவல் - 1 டேபிள்ஸ்பூன்,
தேங்காய்ப் பால் - 1 டேபிள்ஸ்பூன்,
பாசிப் பருப்பு - சிறிது,
நல்லெண்ணெய் - தேவைக்கேற்ப,
உதிராக வடித்த சாதம் - 2 கப்.

எப்படிச் செய்வது?

பொன்னாங்கண்ணிக் கீரையைப் பொடியாக நறுக்கவும். பயத்தம் பருப்பை குழையாமல் வேகவைக்கவும். ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி,  பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும். அது வதங்கியதும் கீரை, பின்பு உப்பு, தேங்காய்த் துருவல் போட்டு  வதக்கி அதில் வெந்த பருப்பும் வடித்த சாதமும் சேர்த்துக்  கிளறவும். கடைசியில் தேங்காய்ப் பால் சேர்த்து இறக்கவும். இதை வாரம் இருமுறை  உண்டால் கூந்தல் உதிர்வது நிற்கும்