Author Topic: ~ முப்பழ அமுதம் ~  (Read 346 times)

Offline MysteRy

~ முப்பழ அமுதம் ~
« on: November 16, 2013, 08:42:52 PM »
முப்பழ அமுதம்



தேவையானவை:
தர்பூசணித் துண்டுகள், பப்பாளிப்பழத் துண்டுகள் - தலா 10, பூரா சர்க்கரை - கால் கப், இளநீர் - ஒரு டம்ளர், நுங்குத் துண்டுகள் - சிறிதளவு.

செய்முறை:
 பழத்துண்டுகளை மிக்ஸியில் போட்டு மசித்து, பிறகு இளநீரை விட்டு ஒரு சுற்று சுற்றி இறக்கவும். பூரா சர்க்கரையை சேர்த்துக் கலக்கவும். கடைசியாக, பொடியாக வெட்டிய நுங்குத் துண்டுகளைச் சேர்த்து கிளாஸ் அல்லது கப்புகளில் ஊற்றிக் கொடுக்கவும். இதை ஐஸ் கட்டிகளை சேர்த்தோ, ஃப்ரிட்ஜில் குளிரவைத்தோ கூட பருகலாம்.