Author Topic: ~ ஆரோக்கியம் தரும் உணவுகள்:- ~  (Read 442 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226420
  • Total likes: 28830
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
ஆரோக்கியம் தரும் உணவுகள்:-




பாதாம் பால், குழந்தைகள் மற்றும் கைக்குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துக்களை அளிக்ககூடிய சிறந்த உணவாகும். பாதாம் பால் தோல் நிறத்தை அதிகரிக்க செய்து முகத்திற்கு பொழிவை தருகிறது.. பாதாமை தொடர்ச்சியாக சாப்பிடுவதன் மூலம் இதயம் மற்றும் மூளையின் செயல்பாடுகள் மேம்படுவது மட்டுமல்லாமல் தசைகளை வலுவடையச்செய்கிறது. மேலும் முடி வளர்ச்சியை அதிகப்படுத்தவும் பாதாம் உதவுகிறது.

பேரீச்சம்பழம்:

பாலை நன்கு கொதிக்க வைத்து பேரீச்சம்பளத்தை அதில் கலந்து தினமும் இளம்பெண்கள், வளரும் குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் சாப்பிடவேண்டும். இது சிறந்த மருத்துவ பலன்களை கொண்டது. இரும்புசத்து மற்றும் நார்சத்து அடங்கியுள்ள பேரீச்சம்பழம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. உடலில் உள்ள ஹார்மோன்களில் நிலையை சரிசெய்ய உதவுகின்றது.. ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சிகள் கொண்ட பெண்கள் தினமும் பாலுடன் இரண்டு பேரீச்சம்பழத்தை போட்டு கொதிக்க வைத்து பாலுடன் தேன் கலந்து ஒவ்வொரு நாளும் சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் பிரச்சனை நீங்கும்..

அக்ரூட் பருப்பு:

உடல் பருமனாக காணப்படுபவர்கள் உடலை குறைத்து கட்டுக்கோப்பாக வைத்திருக்க விரும்பினால் அக்ரூட் பருப்புகளை சாப்பிடுவது நல்லது. இதை சாப்பிட்டால் உடல் எடையை குறைத்து கொள்ளலாம் மேலும் நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்த நோயாளிகளுக்கு அக்ரூட் பருப்புகள் மிக நல்லது. அக்ரூட் பருப்புகள் ரத்த ஒட்டத்தை சீராக்கி மனஅழுத்தத்தை குறைக்க ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்து காணப்படுகிறது.

உலர்திராட்சை:

இரும்புசத்து கொண்ட உலர்திராட்சை பழத்தை இரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்கள் சாப்பிடலாம். உங்களுக்கு அல்லது உங்கள் குழந்தைக்கு எடை குறைவாக இருந்தால் நாளும் 5 உலர் திராட்சைகளையாவது சாப்பிடகொடுங்கள். பின்னர் உங்கள் குழந்தையின் எடை அதிகரிப்பதை பார்க்கலாம். செரிமான கோளாறு மற்றும் மலச்சிக்கல் பிரச்சனையால் பாதிக்கபடுபவர்கள் உலர் திராட்சை பழங்களை சாப்பிடலாம்.

முந்திரி பருப்பு:

முந்திரி பருப்பு இயற்கையின் அதிசயம். இதில் வைட்டமின் பி, மெக்னீசியம், பொட்டாசியம், தாமிரம், நார் புரதம், ஆகிய சத்துகளைகொண்டது. முந்திரி இதயத்தை பாதுகாப்பதோடு இதயம் சம்பந்தமான அனைத்து நோய்க்கும் சிறந்தது முந்திரி பருப்பு.