Author Topic: பேரிச்சம்பழ பச்சடி  (Read 619 times)

Offline kanmani

பேரிச்சம்பழ பச்சடி
« on: November 13, 2013, 10:42:02 AM »


    பேரிச்சம் பழம் - 20
    வெங்காயம் - ஒன்று
    தக்காளி - ஒன்று
    பூண்டு - 5 பல்
    இஞ்சி - ஒரு சிறிய துண்டு
    இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
    புளி - சிறிய எலுமிச்சை அளவு
    மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
    மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
    மசாலா தூள் - ஒரு தேக்கரண்டி
    மிளகு - ஒரு தேக்கரண்டி
    கடுகு - ஒரு தேக்கரண்டி
    கறிவேப்பிலை - ஒரு கொத்து
    வினிகர் - 2 மேசைக்கரண்டி
    எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
    உப்பு

 

 
   

பேரிச்சம் பழத்தை இரண்டாகப் பிளந்து விதையை நீக்கி, தண்ணீரில் ஊற வைக்கவும். ஊறிய பிறகு நன்றாக பிசைந்துவிடவும். வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு ஆகியவற்றை நறுக்கி வைக்கவும். புளியைக் கரைத்து, அதனுடன் வினிகர் மற்றும் உப்பு சேர்த்து கலந்து வைக்கவும்.
   

பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து, கறிவேப்பிலை, வெங்காயம், இஞ்சி, பூண்டு, மிளகு மற்றும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.
   

வதங்கியதும் தக்காளி மற்றும் தூள் வகைகள் சேர்த்து வதக்கவும்.
   

அதனுடன் பேரிச்சம்பழக்கலவை மற்றும் புளிக்கரைசல் ஊற்றி 15 நிமிடங்கள் சிறுதீயில் வைத்து சுருள வேகவிடவும். எண்ணெய் பிரிந்து மேலே மிதந்து வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும்.
   

சுவையான பேரிச்சம்பழ பச்சடி ரெடி. பிரியாணிக்கு ஏற்ற சைட்டிஷ் இது.

 

இதற்கு கொழகொழப்பான பேரிச்சம் பழம் தான் நன்றாக இருக்கும். இதில் வெங்காயத்திற்கு பதில் நாட்டு வெங்காயம் சேர்த்தும் செய்யலாம். புளியின் அளவைக் குறைத்து அதற்கு பதிலாக செதுக்கிய மாங்காய் சேர்த்தும் செய்யலாம். ஃப்ரிட்ஜில் வைத்து ஒரு மாதம் வரை பயன்படுத்தலாம்.