என்னென்ன தேவை?
அமெரிக்க மக்காச் சோளம் - 500 கிராம்,
சோம்பு - 5 கிராம்,
எண்ணெய் - தாளிப்பதற்கு.
சாலட்டுக்கு...
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது),
வெள்ளரிக்காய் - 1 (விதை இல்லாமல் பொடியாக நறுக்கியது),
தக்காளி - 2 (விதை இல்லாமல் பொடியாக நறுக்கியது),
கேரட் - 1 (பொடியாக நறுக்கியது),
மாங்காய் - 50 கிராம் (தோலுடன் பொடியாக நறுக்கியது),
எலுமிச்சை - 1, கொத்தமல்லி - 10 கிராம்,
உப்பு - தேவைக்கேற்ப,
மிளகுத் தூள் - சிறிது.
மாவுக்கு...
சிவப்பு மிளகாய் வற்றல்
(கூழாக மசிக்க) - 100 கிராம்,
மக்காச் சோள மாவு - 125 கிராம்,
அரிசி மாவு - 25 கிராம்,
உப்பு - சிறிது.
எப்படிச் செய்வது?
மாவுக்குத் தேவையான எல்லாப் பொருட்களுடன் சோளம், சோம்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும். இதை சாலட் தயாரிக்க எடுத்து வைத்த பொருட்களுடன் கலந்து அத்துடன் தேவையான அளவு உப்பு, எலுமிச்சைச்சாறு மற்றும் மிளகு சேர்க்கவும் கடாயில் எண்ணெய் ஊற்றி சோளத்தின் வெளிப்புறம் மொறு மொறுவென வரும் வரை 30 நிமிடங்கள் வறுத்து, பிறகு தனியாக எடுத்து வைக்கவும் சாலட்டுக்கு நறுக்கிய காய்களுடன் சேர்த்துப் புரட்டி எடுக்கவும். கொஞ்சம் எலுமிச்சைச் சாறு கலந்து சுடச்சுட மக்காச் சோள வறுவலைப் பரிமாறவும்.