தேவையான பொருட்கள்:
கேரட் - 1/4 கிலோ
பஜ்ஜிமா - 1பாக்கேட்
சக்கரை - 200g
எண்ணெய் - 1/4 கிலோ
செய்முறை:
கேரட்டை தண்ணீரில் என்றாக கழுவி வட்ட வட்டமாக நைசாக நறுக்கி கொள்ளவும். பஜ்ஜிமாவை ஒரு பாத்திரத்தில் கொட்டி சக்கரை சேர்த்து தண்ணீர் விட்டு இட்லிமா பதத்துக்கு கரைத்துக் கொள்ளவும். பின் வானலியில் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைத்து காய்ந்ததும் கேரட்டை மாவில் தோய்த்துப் போடவேண்டும். இருபுறமும் வெந்ததும் எடுத்து சூடாக பறிமாறலாம். அவ்வளவுதான் இலகுவாக செய்திடலாம்.