Author Topic: ~ சிகிளீனர் (CCleaner) புதிய பதிப்பு ~  (Read 1311 times)

Offline MysteRy

சிகிளீனர் (CCleaner) புதிய பதிப்பு


கம்ப்யூட்டரில் தங்கும் தேவையற்ற பைல்களை அழிப்பது, ரெஜிஸ்ட்ரியில் நீக்காமல் விடப்படும் குறியீடுகளை நீக்குவது, பயனற்ற குக்கீ பைல்களை ஒழிப்பது போன்ற பல பணிகளுக்குப் பெரும்பாலானவர்கள் பயன்படுத்தும் சி கிளீனர் தொகுப்பின் புதிய பதிப்பு, v4.07.4369 அண்மையில் வெளியிடப்பட்டது.

இந்த பதிப்பு விண்டோஸ் 8.1 சிஸ்டத்தில் இணைந்து இயங்கும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது.

பழைய விண்டோஸ் சிஸ்டத்தின் போல்டர்களை நீக்கும் திறன் வழங்கப்பட்டுள்ளது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் ஹிஸ்டரி பைல்களை நீக்குவதில் புதிய முறை தரப்பட்டுள்ளது.

இதே போல பல புதிய புரோகிராம்களுக்கான வசதிகளுடன், சில சிறிய தவறுகளும் சரி செய்யப்பட்டுள்ளதாக, இதனைத் தயாரித்து வழங்கும் பிரிபார்ம் நிறுவனம் அறிவித்துள்ளது.