Author Topic: ஆலு கோபி மசாலா  (Read 408 times)

Offline kanmani

ஆலு கோபி மசாலா
« on: November 11, 2013, 09:14:27 AM »
தேவையான பொருட்கள்:

காலிஃப்ளவர் - 1 (சிறியது மற்றும் சிறிய துண்டுகளாக நறுக்கியது)
உருளைக்கிழங்கு - 3 (சிறியது மற்றும் சிறிய துண்டுகளாக நறுக்கியது)
பச்சை பட்டாணி - 1 கப்
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
சீரகம் - 1 டீஸ்பூன்
பிரியாணி இலை - 1
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
மல்லி தூள் - 2 டீஸ்பூன்
மாங்காய் தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)
தண்ணீர் - 1/2 கப்

செய்முறை:

முதலில் நறுக்கி வைத்துள்ள காலிஃப்ளவரை வெதுவெதுப்பான நீரில் போட்டு சிறிது நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

அதேப் போன்று நறுக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கையும் குளிர்ந்த நீரில் போட்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், பிரியாணி இலை, பெருங்காயத் தூள் சேர்த்து சிறிது நேரம் தாளிக்க வேண்டும். பின் வெங்காயம் சேர்த்து, தீயை குறைவில் வைத்து 4-5 நிமிடம் வதக்க வேண்டும்.

அடுத்து இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 2-3 நிமிடம் வதக்கி, தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகப் பொடி, மாங்காய் தூள், மல்லி தூள் மற்றும் உப்பு சேர்த்து 5-6 நிமிடம் நன்கு வதக்கி விட வேண்டும்.

பிறகு பச்சை பட்டாணி, காலிஃப்ளவர், உருளைக்கிழங்கு சேர்த்து, காய்கறிகளில் மசாலா நன்கு சேரும் வரை, சுமார் 5-6 நிமிடம் கிளறி விட வேண்டும். பின் தண்ணீர் ஊற்றி, தட்டு கொண்டு மூடி வைத்து, குறைவான தீயிலேயே 7-8 நிமிடம் கொதிக்க விட்டு, இறுதியில் கரம் மசாலா சேர்த்து கிளறி இறக்கி, கொத்தமல்லியை தூவி அலங்கரித்தால், சுவையான ஆலு கோபி மசாலா ரெடி!!!