என்னென்ன தேவை?
கொண்டைக்கடலை - 250 கிராம், எண்ணெய் தேவையான அளவு.
வெறும் கடாயில் வறுப்பதற்கு...
வறுத்த மசாலா தூள், மிளகு, சீரகம், உப்பு, தனியா, காய்ந்த மிளகாய் தூள், தனித் தனியாக வறுத்து பொடித்தது - தலா 2 டீஸ்பூன் அல்லது 1 டீஸ்பூன் (விருப்பத்திற்கு ஏற்ப காரம் சேர்த்துக் கொள்ளலாம்).
எப்படிச் செய்வது?
கொண்டைக்கடலையை 8 மணி நேரம் ஊறவைக்கவும். அதை வடித்து ஒரு வெள்ளைத் துணியில் வைத்து ஃபேனுக்கு அடியில் சிறிது நேரம் காய விடவும். பிறகு ஒரு வாய் அகன்ற கடாயில் எண்ணெயைக் காய வைத்து, கொண்டைக்கடலையை கொஞ்சம் கொஞ்சமாக பொரித்து, வடித்து ஒரு பேப்பரின் மேல் போட்டு வைக்கவும். அது சூடாக இருக்கும்போதே டிரை ரோஸ்ட் செய்யவும் (எல்லாவற்றையும் கலக்கவும்). அந்த காரத் தூளை கொண்டைக்கடலையின் மேல் தூவி, குலுக்கவும்.
கடலையின் மேல் மசாலா நன்கு ஒட்டிக் கொண்டு ஆறியதும் எடுத்து வைக்கவும்.
கொண்டைக்கடலையை கவனமாக, வெடிக்காதபடி மிதமான தீயில் பொரிக்க வேண்டும்