இறைவா!
ஏன் எங்களை இப்படி படைத்தாய்
சாதி என்னும் அரகக்னும் மதம்
என்னும் சாத்தானும் எஙகளை
வாழ விடாமல் அழிக்கவா?
பணம் என்ற கொடிய விலங்கு
நாள் தோறும் பல உயிர்களை
அழித்து கொல்கிறதே பசி என்ற
ஆயுதத்தை கையில் கொண்டு
ஏழையாம் பணக்காரனாம்
ஏன் இந்த ஏற்றத் தாழ்வு
எதற்கு இந்த மிருக மனம்
ஆசை வெறி கொண்டு
அழித்து வாழ்வதற்காகவா?
பற்றாக்குறைக்கு நீயும் எங்களை
வாட்டி வதைத்துக் கொல்கிறாய்
கடும் மழையும் கடும் காற்றும்
கடல் சீற்றமும் கடும் வெப்பமும்
கடும் குளிரால் உன் பங்குக்கு
உன் வேலையை முடித்துக்
கொள்ளவா எங்களை படைத்தாய்
எதற்கு இந்த வாழ்க்கை இன்பமும்
துன்பமும் கொடுத்து எங்களுக்கு
வாழ்க்கையை புரிய வைத்து என்ன
செய்ய போகிறோம் நாங்கள்
இந்த அழிந்து போகும் உடலில்
இருக்கும் வரை எல்லோரையும்
இன்பத்தை கொடுத்து விடு
இல்லையென்றால் எங்கள் எல்லா
உயிர்களையும் எடுத்து விடு.....................ஆம் எடுத்துக்கொள் எங்கள் உயிரை ...........