Author Topic: ~ சாம்பார் பொடி! பொடி வகைகள்!! ~  (Read 529 times)

Online MysteRy

சாம்பார் பொடி! பொடி வகைகள்!!



தேவையான பொருட்கள்:
தனியா -​ ஒரு கப்
கடலை பருப்பு -​ ஒரு டேபிள் ஸ்பூன்
துவ​ரம் பருப்பு -​ ஒரு டேபிள்ஸ்பூன்
உளுத்தம் பருப்பு -​ ஒரு டீ ஸ்பூன்
மிளகாய் வற்றல் -​ எட்டு
மிளகு -​ ஒரு டீ ஸ்பூன்
சீரகம் -​ ஒரு டீ ஸ்பூன்
பெருங்காயம் தூள் ​ -​ ஒரு டீ ஸ்பூன்
கறிவேப்பிலை -​ ஒரு கொத்து ​(தேவைப்பட்டால்)
வெந்தயம் -​ ஒரு டீ ஸ்பூன்
எண்ணெய் -​ ஒரு டேபிள் ஸ்பூன்

செய்முறை:
கடா​யில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்​ணெய் ஊற்றி காய​வைத்து பருப்பு வகை​களை முத​லில் சேர்த்து சிவக்க வறுக்கவும்.
பருப்புகள் நன்றாக வறுபட்டதும் மீதம் உள்ள பொருட்களைச் சேர்த்து வறுத்து ஆறவிடவும்.​
நன்றாக ஆறியதும் மிக்சியில் பொடி செய்து மேலும் ஒரு இரண்டு நிமிடம் வெளியில் வைத்தால் மணக்கும் சாம்பார் பொடி தயார்.​
பின்பு டப்பாவில் போட்டு மூடி வைத்தால் இரண்டு ​ மாதம் வரை வாசனையுடன் இருக்கும்.