Author Topic: ~ தக்காளி சூப்--உடலுக்கு வலிவு தரும் சூப்கள் ~  (Read 375 times)

Offline MysteRy

தக்காளி சூப்--உடலுக்கு வலிவு தரும் சூப்கள்



தேவையான பொருட்கள்:
துவரம் பருப்பு – 1/4கப்
நாட்டு தக்காளி – 5
மிளகு – 1ஸ்பூன்
சீரகம் – 1ஸ்பூன்
பூண்டு – சிறிதளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லி இழை – சிறிதளவு
காய்ந்த மிளகாய் – 5
கடுகு – சிறிதளவு
மஞ்சள் தூள் – சிறிதளவு
பெருங்காயத்தூள் – சிறிதளவு
கரி மசாலா தூள் – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:
குக்கரில் துவரம்பருப்பு, தக்காளி ஆகிய சேர்த்து தேவையானளவு தண்ணீர் ஊற்றி நன்கு வேகவைத்துக் கொள்ளவும்.. விசில் அடங்கியவுடன் வெளியே எடுத்து கரண்டியில் மசித்து கொள்ளவும்.. இல்லையென்றால் மிக்ஸியில் 1சுற்று வைத்து கொள்ளவும்…
பூண்டு, கறிவேப்பிலை, மிளகு, சீரகம் ஆகியவற்றை பொடித்து வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் அரைத்த விழுது, பொடித்த பொருட்கள், மஞ்சள் தூள், உப்பு , கொத்தமல்லி இழை ஆகியவற்றை சேர்த்து 1கப் தண்ணீர்விட்டு முரைத்து வரும் வரை மூடி வைக்கவும். 1கொதி வந்தவுடன் அடுப்பை அணைத்துவிடவும்…
வாணலியில் எண்ணெய்விட்டு எண்ணெய் காய்ந்ததும் கடுகை போடவும்… அது வெடித்த பின்பு சீரகம், பெருங்காயத் தூள், கரி மசாலாத் தூள், கறிவேப்பிலை, காய்ந்தமிளகாய் ஆகியவற்றை நன்கு வறுத்து கொதித்த கலவையில் கொட்டவும்…
சுவையான தக்காளி சூப் தயார்…
இதனை இட்லி, சாதம், தோசை, இடியாப்பம் ஆகியவற்றுடன் சேர்த்து உண்ணலாம்.