Author Topic: நூறு வயது வாழ......  (Read 1602 times)

Offline Global Angel

நூறு வயது வாழ......
« on: November 18, 2011, 06:04:04 PM »
நூறு வயது வாழ......


இரத்த ஓட்டம் மற்றும் இதய நோய் பாதிப்புகள் தொடர்பான மாநாடு கனடாவில் நடைபெற்றது. உலகின் பல நாடுகளைச் சேர்ந்த மருத்துவர்கள், சிறப்பு நிபுணர்கள், ஆராய்ச்சியாளர்கள் இம்மாநாட்டில் கலந்து கொண்டனர்.
 
நூறு வயது வரை ஆரோக்கியமாக வாழ்வதற்கு அடிப்படையான 7 கருத்துகளை கனடா நாட்டைச் சேர்ந்த இதய சிகிச்சை நிபுணர் கிளைட் யான்சி உரையாற்றியுள்ளார்.
 
இரத்த ஓட்டத்தில் ஏற்படும் திடீர் பாதிப்புகள், முடக்குவாதம், மாரடைப்பு போன்றவற்றால் பெரும்பாலான மக்கள் உலக முழுவதும் பாதிக்கப்படுகின்றனர்.
 
இதய நோய் காரணமாக அமெரிக்கா பிரித்தானியா, கனடா உள்ளிட்ட நாடுகளில் சுமார் 25 சதவிகித மக்கள் இறக்கின்றனர். பிரித்தானியாவில் மட்டும் 27 லட்சம் மக்கள் ஏதாவதொரு வகையில் இதய நோயால் பாதிக்கப்படுகின்றனர். கடைசி நேரம் வரை அறிகுறி எதுவும் இல்லாமல் திடீரெனத் தாக்கும் என்பதால் இதய நோய்கள் சைலன்ட் கில்லர் எனப்படுகின்றன.
 
எனவே, இதய நோய்கள் ஏற்படுவதற்கான மூல காரணத்தைக் கண்டறிந்து அதிலிருந்தே சிகிச்சையைத் தொடங்குவது அவசியமாகிறது. இவற்றைக் கருத்தில்கொண்டு 7 கட்டளைகளைப் பின்பற்றினால் இரத்த ஓட்டம் உள்பட இதயம் தொடர்பான அனைத்துப் பாதிப்புகளையும் தவிர்க்க முடியும்.
 
ஏழு கட்டளைகள்:
 
1. உங்களின் வயது, உயரத்துக்கு ஏற்ற எடையைப் பராமரிப்பது. எடை குறைந்தால் சத்தான ஆகாரம் சேர்த்துக் கொள்வது. எடை அதிகரித்தால் உடற்பயிற்சிகளை அதிகரித்து எடையைக் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும்.
 
2. புகைப் பிடிக்கும் பழக்கத்தை நிறுத்த வேண்டும்.
 
3. சீரான இடைவெளியில் இரத்தப் பரிசோதனைகள் செய்து (கொலஸ்ட்ரால்) கொழுப்பு அளவைத் தெரிந்து கொண்டு, அதனைக் கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும்.
 
4. ரத்த அழுத்தத்தைச் சீராக வைத்திருக்க வேண்டும்.
 
5. உடலின் குளுக்கோசின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.
 
6. ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே சாப்பிட்டு உணவுக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும்.
 
7. எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும்.
 
இந்த 7 கட்டளைகளையும் தவறாமல் பின்பற்றினால் 100 வயதுவரை ஆரோக்கியமாக வாழ முடியும் என்று தெரிவித்துள்ளார் மருத்துவர் கிளைட் யான்சி.