Author Topic: ~ மாடிப்படி ஏறி, இறங்குவது கால் மூட்டுகளை பாதிக்குமா? ~  (Read 461 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226420
  • Total likes: 28830
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
மாடிப்படி ஏறி, இறங்குவது கால் மூட்டுகளை பாதிக்குமா?




மூட்டில் ஏற்படும் பிரச்னைகள் அதற்கான சிகிச்சை முறைகள் பற்றிய கேள்விகளுக்கு ஆர்த்தோ ஒன் எலும்பு மற்றும் மூட்டு சிகிச்சை மையத்தின் மருத்துவரும் ஆர்த்ரோஸ்கோபி மற்றும் விளையாட்டு காயங்களுக்கான சிறப்பு சிகிச்சை நிபுணருமான டாக்டர் கிளமெண்ட் ஜோசப் பதிலளிக்கிறார்.

விளையாடுபவர்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் என்னென்ன? அதற்குரிய சிகிச்சைகள் என்ன?

தசை பிடிப்பு, தசை கிழிவு, மூட்டு சவ்வு கிழிதல், மூட்டு தசைநார் கிழிவு, மூட்டு விலகுதல், தசை சோர்வு ஆகியனவாகும். தசை பிடிப்பு மற்றும் தசை சோர்வு போன்ற பிரச்னைகளுக்கு ஓய்வு முறை மூலம் சிகிச்சை அளிக்கலாம். மூட்டு தசை நார் கிழிதல், மூட்டு சவ்வு கிழிதல், மூட்டு விலகுதல் போன்ற பிரச்னைகளுக்கு ஆர்த்ரோஸ்கோபி மூலம் சிகிச்சை அளிக்கலாம்.

குழந்தைகளுக்கு ஏற்படும் தசை, மூட்டு விலகலுக்கு ஆர்த்ரோஸ்கோபி சிகிச்சை மேற்கொள்ளலாமா?

குழந்தைகளுக்கென்று தனிப்பட்ட சிகிச்சை முறைகள் உள்ளன. எலும்புகள் வளர்ச்சி பாதிக்காத வகையில் ஆர்த்ரோஸ்கோபி சிகிச்சை அளிக்கலாம்.

மூட்டு வலிக்கு உடல் எடை முக்கிய காரணமா? எவ்வளவு உடை இருந்தால் மூட்டு வலி வராது?

மூட்டு வலிக்கு உடல் எடையும் ஒரு காரணமாக உள்ளது. ஒவ்வொருவரின் உடல் எடை அவரது வயது, உயரத்திற்கேற்ப குறிப்பிட்ட எடை இருக்க வேண்டும் என்கிற அலகு உள்ளது. அது பிஎம்ஐ அலகு எனப்படும். பிஎம்ஐ அலகை கணக்கிட்டு உடல் எடை அதிகமுள்ளதா என்பதை கண்டறிய வேண்டும்.

தரையில் அமர்ந்து எழுதுவது, படிப்பது எனது பழக்கம். மூட்டு பாதிப்பு ஏற்படாமல் இருக்க அதிகபட்சம் எவ்வளவு நேரம் அமர்ந்தால் பிரச்னை இல்லை?

சிறிய வயதாக இருந்தால் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் உட்காரலாம். 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் தொடர்ந்து தரையில் அமர்வது மூட்டுகளை பாதிக்கும். சேரில் அமர்வது நல்லது. ஏற்கனவே மூட்டுகளில் பாதிப்பு இருந்தால் தரையில் அமர்வதை தவிர்க்க வேண்டும்.

நான் பெண். ஜாக்கெட் போடும்போது கையை தூக்கும்போது தோள்பட்டையில் சதை பிடிப்பது போல் உள்ளது. இது எதன் அறிகுறி?

சுகர், தைராய்டு பாதிப்பு இருந்தால் சதை பிடிப்பது போல் இருக்கும். முதலில் சுகர், தைராய்டு பாதிப்பு உள்ளதா என்பதை பரிசோதிக்க வேண்டும். அதற்கு மருத்துவரை அணுகுவது நல்லது.

எனக்கு வயது 45. மாதவிடாய் நின்று விட்டது. மூட்டுகள் வலிக்கிறது. மாதவிடாய் நின்றதால் ஏற்படுகிறதா? இதை சரி செய்ய என்ன செய்ய வேண்டும்?

40 வயதிற்குள் ஒரு பெண் தன் உடலுக்கு தேவையான கால்சியம் சத்துக்களை எடுத்துக்கொண்டால், அவருக்கு மாதவிடாய் நின்றபின் வரக்கூடிய ஆர்த்தியோபோரோபிட் எனும் பாதிப்பு வராது. இல்லாவிட்டால் அந்த பாதிப்பு ஏற்படும். ஆர்த்தியோபோரோபிட் பாதிப்பு என்பது எலும்புகளை மிருதுவாக்கி, உறையும் தன்மையாகும். இது மாதவிடாய் நின்ற பெண்களுக்கு வருகிறது. இதை தவிர்க்க முன்கூட்டியே கால்சியம் சத்துக்களை எடுத்துக்கொள்ள வேண்டும். ஆர்த்தியோபோரோபிட் பாதிப்புள்ளதா என்பதை கண்டறிய மருத்துவரை பார்ப்பது நல்லது.