Author Topic: ~ துளசி ஆரஞ்சுச் சாறு ~  (Read 472 times)

Offline MysteRy

~ துளசி ஆரஞ்சுச் சாறு ~
« on: November 02, 2013, 07:49:43 PM »
துளசி ஆரஞ்சுச் சாறு



தேவையானவை:
துளசி - 5 கிராம்,  பழுத்த ஆரஞ்சு - 2, ஆரஞ்சுப் பழத் தோல் - ஒரு துண்டு, சர்க்கரை - தேவையான அளவு.

செய்முறை:
முதலில் ஆரஞ்சுப் பழத்தின் விதைகளை எடுத்து, அதனைச் சாறு பிழிந்துகொள்ள வேண்டும். அதனுடன் துளசியை நறுக்கிச் சேர்த்து ஆரஞ்சு பழத் தோலையும் சேர்த்து நன்கு மிக்ஸியில் அடித்து, சர்க்கரை சேர்த்தால், துளசி - ஆரஞ்சு பானம் தயார். மிக விரைவில் தயாரிக்கக்கூடிய எளிய வகை பானம் இது.

பலன்கள்:
வயிற்று உபாதைகளால் பாதிக்கப்பட்டவர்கள், வாயுத்தொல்லை உள்ளவர்கள் இந்தச் சாற்றை அருந்துவதன் மூலம் நிவாரணம் பெறலாம்.
முகப் பளபளப்பை விரும்புபவர்களுக்கு இது மிகவும் ஏற்றது.
 துளசியானது வயிற்றுப் புண், வாயுத் தொல்லை, சளி, கபம் உள்ளவர்களுக்கு நல்ல பலனைத் தரும்.