Author Topic: ~ நெல்லிக்காய்ப் பச்சடி ~  (Read 596 times)

Offline MysteRy

நெல்லிக்காய்ப் பச்சடி



தேவையானவை:
பெரிய நெல்லிக்காய் - 2, பச்சை மிளகாய் - சிறிய துண்டு, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, தயிர் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு,  கறிவேப்பிலை, கொத்துமல்லி - தேவையான அளவு, தாளிக்க: கடுகு, சீரகம், பெருங்காயம் - தலா கால் டீஸ்பூன்.

செய்முறை:
நெல்லிக்காயைத் துருவி, பச்சை மிளகாய், துருவிய இஞ்சி, உப்பு சேர்த்து மிக்ஸியில் இரண்டு சுற்று சுற்றி எடுக்கவும். அதனுடன் தயிர் சேர்த்துத் தாளித்து, கறிவேப்பிலை, கொத்துமல்லியைப் பொடியாக நறுக்கித் தூவிப் பரிமாறவும்.

குறிப்பு:
தயிர் அதிகமாகச் சேர்த்தால் புளிப்பாகிவிடும். எனவே, புளிக்காத தயிரை மிதமாகச் சேர்க்கவும். நெல்லிக்காய் மலிவாகக் கிடைக்கும்போது வாங்கி, அதைத் துருவி, கூடவே  இஞ்சியையும் துருவி, ஒரு டப்பாவில் போட்டு ஃப்ரீஸரில் வைத்துக்கொண்டால், தேவையானபோது பச்சடி செய்யலாம்.

பலன்கள்:
 வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து நிரம்பிய பச்சடி இது.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.