Author Topic: அனார்சே  (Read 455 times)

Offline kanmani

அனார்சே
« on: October 31, 2013, 11:18:03 PM »
என்னென்ன தேவை?

பச்சரிசி - ஒரு கப், பால்,
சர்க்கரைத் தூள் - தலா ஒரு கப்,
ஏலக்காய் தூள் - ஒரு டீஸ்பூன்,
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு,
கசகசா - சிறிதளவு.
எப்படிச் செய்வது?

பச்சரிசியை சுத்தம் செய்து கழுவி பாலில் 6-7 மணி நேரம் ஊற வைக்கவும். (இவ்வரிசியை 2-3 நாட்களும் ஊற வைக்கலாம். ஆனால், தண்ணீரை  தினமும் மாற்ற வேண்டும். இதனால் மாவு மிக மென்மையாக வரும்.) பாலை வடித்து, அரிசியை பசை போல் அரைத்துக் கொள்ளவும். இத்துடன் மீதி  பாலைச் சேர்த்து, சர்க்கரைத் தூள், ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கலக்கவும். கலவை கொஞ்சம் தண்ணீராக இருந்தால் சிறிது காய்ந்த பச்சரிசி மாவை  சேர்த்துப் பிசைந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கசகசா மேல் புரட்டி  ரோல் செய்யவும். இதைப் போல் எல்லா உருண்டைகளையும் தட்டி மிதமான சூட்டில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். இதனை டிஷ்யூ பேப்பரில்  வைத்து எண்ணெய் வடிந்ததும் காற்று புகாத டின்களில் வைத்து சாப்பிடலாம்.