என்னென்ன தேவை?
கருப்பு எள் - அரை கப்,
ஓட்ஸ், வேர்க்கடலை, பாதாம், துருவிய வெல்லம் - தலா கால் கப்,
நெய் - 2 டீஸ்பூன்,
ஏலக்காய் தூள் - 1
டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
நான்-ஸ்டிக் கடாயில் கருப்பு எள், ஓட்ஸ், வேர்க்கடலை மற்றும் பாதாம் பருப்பு ஆகியவற்றை 3 அல்லது 4 நிமிடங்களுக்கு வறுத்து எடுத்துக்கொள்ளவும். சிறிது சூடு ஆறியபின் அனைத்தையும் தூளாக்கவும். துருவிய வெல்லம், ஏலக்காய் தூள், நெய் ஆகியவற்றை தூளாக்கி வைத்துள்ள கலவையுடன் சேர்த்து கலக்கவும். கலவையை மிதமான தீயில் வைத்து சூடேற்றியபின் உள்ளங்கையில் எண்ணெய் தடவிக்கொண்டு சூடான கலவையை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி லட்டு மாதிரி பிடிக்கவும். இதனை சூடு ஆறியபின் காற்று புகாத பாத்திரத்தில் போட்டு வைத்துக்கொள்ளவும்.