என்னென்ன தேவை?
பேரீச்சம்பழம் - அரை கப்,
உலர்ந்த பேரிக்காய் (பெரிய கடைகளில் கிடைக்கிறது) - 8 அல்லது 10,
பாதாம் பருப்பு - கால் கப்,
டைஜஸ்டிவ் பிஸ்கெட் - 2,
கோகோ தூள், உலர்ந்த தேங்காய்த் துருவல் மற்றும் தேன் - தலா ஒரு டேபிள்ஸ்பூன்.
எப்படிச் செய்வது?
பாதாம் பருப்பை கரகரப்பாக மிக்ஸியில் அரைக்கவும். பேரிக்காயை சுத்தம் செய்து துண்டுகளாக்கியும் பேரீச்சம் பழத்தை கொட்டை நீக்கியும் வைக்கவும். பிஸ்கெட்டை தூளாக்கி அத்துடன் கோகோ தூளை சேர்க்கவும். மேற்கண்ட அனைத்து பொருட்களையும் ஒன்றாகச் சேர்த்து கரகரப்பாக அரைத்து எடுக்கவும். இந்தக் கலவையுடன் தேங்காய்த் துருவல் மற்றும் தேன் சேர்த்து நன்றாகப் பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எடுக்கவும்.