இன்று எல்லோர் வீட்டிலும் செல்லப் பிராணிகள் வளர்ப்பது பேஷன் ஆகிவிட்டது. ஆனால், அவற்றை எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்பது பலருக்கு தெரிவதில்லை. அவற்றை சுத்தமாக வைக்காவிட்டால், அவற்றின் மூலமாக நமக்கு பலவிதமான தொற்று நோய்கள் வர வாய்ப்பு இருக்கின்றது. மேலும், செல்லப் பிராணிகள் வளர்ப்பதற்கு வீட்டில் அதற்கு தகுந்த இடம், உணவு ஆகியவை இருப்பது அவசியமானதாகும். அவற்றை பராமரிப்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மேலும் அவை நோய் வாய்ப்பட்டால் மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும்.
நாய் மனிதர்களின் சிறந்த நண்பன் தான், ஆனால் எப்பொழுதும் அல்ல. சில நேரங்களில், சிறந்த நண்பன் கூட எதிரியாக மாறிவிடும். ஒரு கோபமான நாய், சில சமயங்களில் குதித்து சுற்றுதல், முன்னும் பின்னும் ஓடுதல் போன்றவற்றை செய்து, அதன் கோபத்தை வெளிப்படுத்தும். கோபமான நாய்க்கு தன்னைத் தானே கட்டுப்படுத்திக் கொள்ள தெரியாது. அவற்றை அமைதிப்படுத்துவதற்கு உங்கள் உதவி தேவைப்படலாம். ஒரு கோபமான நாயை கையாளுவது கடினம் தான். எனினும், அதே சமயத்தில் நாய்கள் நமக்கு அதை தெரிவிப்பது நல்ல செய்தி தான். T
கோபம் கொண்ட நாயை அடக்குவது சில சமயங்களில் கடினம் தான். ஆனால், போதுமான கவனத்துடன் கையாண்டால் நிச்சயமாக அமைதிப்படுத்தலாம். கோபம் கொண்ட நாயை அமைதிபடுத்த மிக முக்கியமான வழி "தெரிவித்தல்" ஆகும். கோபம் கொண்ட நாயிடம் நாம் இரக்க உணர்வையும், அமைதியாக நோக்கத்தையும் தெரிவிக்க வேண்டும். கோபம் கொண்ட நாயை அமைதிபடுத்துவது எப்படி என்பதை இப்பொழுது தெரிந்து கொள்ளலாம்.
கண்கள் பேசும்
நமது உண்மையான உணர்வுகளை தெரிவிக்கும் முக்கிய உறுப்புகளில் ஒன்று கண்கள். கோபம் கொண்ட நாயை அமைதிபடுத்துவதில் முதலாவதாக நாம் அவற்றின் கண்களை நேராக பார்க்கக் கூடாது. நமது முகத்தை வேறு புறமாக திருப்பி, அவற்றை பார்ப்பதை தவிர்க்க வேண்டும். கண்டிப்பாக பின்புறம் திரும்பி ஓடக்கூடாது. நிதானமாகவும், மெதுவாகவும் செல்லுவதே பாதுகாப்பானது. நாம் சற்று விலகி இருக்க வேண்டும் கோபம் கொண்ட நாயை பார்த்தால்,
நாம் சற்று விலகியே இருக்க வேண்டும்.
நடைபயிற்சி அல்லது ஓட்டப் பயிற்சியின் போதோ, அவை இருக்கும் சாலையில் இருந்து நாம் விலகி இருப்பதே நல்லது. அவற்றின் முதலாளியின் அனுமதியுடன் அவற்றை நட்புடன் தொடலாம்.
உடல் மொழியில் கவனம்
கோபம் கொண்ட நாயை அமைதியாக்க நாம் நமது செயல்களால் பல விந்தைகளை செய்யலாம். ஒழுங்கான உடல் செயல்பாட்டால், நீங்கள் கோபம் கொண்ட நாயை அமைதிப்படுத்தலாம். நமது உடல் பக்கவாட்டில் இருக்கும்படியாக திரும்பி மெதுவாக அங்கிருந்து சென்று விடலாம். மேலும், உங்கள் கைகளை பாக்கெட்டுகளில் வைத்துக் கொள்ளலாம்.
சிறிது இரக்கம் காட்ட வேண்டும்
இரக்கம் காட்டுதல் ஒரு கோபமான நாயை அமைதிபடுத்த மிகச்சிறந்த வழி ஆகும். நாம் கத்துவதால் அதன் கோபம் அதிகமாகக்கூடும் என்பதை நினைவு கொள்ள வேண்டும். அதனால், அன்புடன் மெதுவாகப் பேசிவிட்டு, அந்த இடத்தில இருந்து நகர்ந்து போய் விட வேண்டும். தேவையான கவனம் கொடுக்க வேண்டும் உங்கள் நாய்க்கு உங்களின் கவனம் தேவைப்படலாம். அதனால், அதற்கு உங்களின் கவனத்தை கொடுக்க மறந்துவிடாதீர்கள். குறிப்பாக, அது கெட்ட மனநிலையில் இருக்கும் போது, கண்டிப்பாக கவனம் கொடுக்க வேண்டும். கோபம் கொண்ட நாயை, உங்களின் முழு கவனத்தை கொடுத்து, அதன் இயல்பை பலபடுத்தலாம்.
தேவையான கவனம் கொடுக்க வேண்டும்
உங்கள் நாய்க்கு உங்களின் கவனம் தேவைப்படலாம். அதனால், அதற்கு உங்களின் கவனத்தை கொடுக்க மறந்துவிடாதீர்கள். குறிப்பாக, அது கெட்ட மனநிலையில் இருக்கும் போது, கண்டிப்பாக கவனம் கொடுக்க வேண்டும். கோபம் கொண்ட நாயை, உங்களின் முழு கவனத்தை கொடுத்து, அதன் இயல்பை பலபடுத்தலாம்.
பிடித்த உணவைக் கொடுக்கலாம்
கோபமான நாயை அமைதிபடுத்த இன்னொரு வழி, அதற்கு பிடித்த உணவை கொடுப்பது தான். உங்கள் கைகளில் அதற்கு பிடித்த உணவை வைத்து கொண்டால், அது உங்களையே நோக்கி ஓடி வரும். எதுவுமே செய்யாமல், வெறும் அந்த உணவை அதற்கு கொடுத்தால், உங்களின் முழு கட்டுக்குள் அடங்கும்.
கோபம் கொண்ட நாயை கவனமாக கண்காணிப்பது, அதன் பழக்கங்களை கவனமாக படித்தல் போன்றவற்றை மேற்கொண்டால், அதனை அடக்குவது மிகவும் சுலபம். அதன் உடல் செயல்பாடுகளை கண்காணித்தால், அதனை நன்றாக புரிந்து கொள்ளலாம். மேலும் நல்ல வலிமையான தொடர்புகொள்ளுதல் மூலம் நாயுடன் உறவை வலுப்படுத்தலாம். அப்படி நாய் உங்களின் முழு கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டால், அவை மீண்டும் உங்கள் உற்ற நண்பனாகிவிடும்.