Author Topic: சஜ்ஜா ரொட்டி  (Read 495 times)

Offline kanmani

சஜ்ஜா ரொட்டி
« on: October 27, 2013, 11:35:11 PM »
என்னென்ன தேவை?

கம்பு மாவு         - 1 கப்
உப்பு         - தேவையான அளவு
பச்சை மிளகாய்     - 3
கறிவேப்பிலை         - 1 கொத்து
முட்டைகோஸ்         - 100 கிராம்
கேரட்         - 2
உருளைக்கிழங்கு     - 1
எண்ணெய்         - தேவையான அளவு.
எப்படி செய்வது?

முட்டைகோஸ், கேரட், உருளைக்கிழங்கை கேரட் சீவி மூலம் சீவிக் கொள்ளுங்கள். பச்சை மிளகாயை சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளுங்கள். கம்பு  மாவில் உப்பு, வெட்டிய காய்கறிகளைப் போட்டு சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசைந்து சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளுங்கள். தோசைக்கல்லில்  எண்ணெய் விட்டு உருண்டையை கனமாக தட்டி இருபுறமும் வேகவிட்டு எடுங்கள். ஆந்திர தேசத்து சஜ்ஜா ரொட்டி ரெடி.