Author Topic: ~ டிப்ஸ்... டிப்ஸ்...வீட்டுக்குறிப்புக்கள் ~  (Read 4820 times)

Offline MysteRy

சமைப்பதற்கு அதிக அளவு பயன்படும் இடுக்கியில் பிசுக்கும், அழுக்கும் படிந்திருக்கிறதா? ஒவ்வொரு முறை பயன்படுத்திய பிறகும், அரிசி களைந்த தண்ணீரில் போட்டு வையுங்கள். இந்த நீரில் ஊற வைத்துத் தேய்த்தால் பளிச்சென்று ஆகிவிடும்.

Offline MysteRy



சப்பாத்தி, பூரிக்கு மாவு பிசைந்ததும் தனித்தனி உருண்டைகளாக செய்ய அதிக நேரம் பிடிக்கும். மாவைப் பிசைந்ததும், நீண்ட உருளை போல் செய்து, உலர்ந்த மாவில் புரட்டுங்கள். பிறகு, கத்தியால் சம இடைவெளி விட்டு வெட்டினால் வேலை சீக்கிரத்தில் முடிந்துவிடும். சப்பாத்திகளும் சம அளவிலானதாக இருக்கும்.


Offline MysteRy

தேங்காய் துவையல், சட்னி போன்றவை கெட்டுப் போகாமல் இருக்க புளி சேர்ப்பது வழக்கம். புளிக்குப் பதிலாக தெளிவான ரசத்தை விட்டு அரைத்தால் டேஸ்ட்டும் வித்தியாசமாக இருக்கும்.

Offline MysteRy



வெண்டைக்காயை பொரியல் செய்யும்போது, கொழகொழப்புடன் இருப்பது சிலருக்கு பிடிக்காமல் போகும். ஒரு தக்காளியைத் துண்டுகளாக்கி சேர்த்து வதக்கிப் பாருங்கள்... வெண்டை பொரியல் பொலபொலப்புடன் சாப்பிட அருமையாக இருக்கும்.
===========================================================
பால் சேர்த்து செய்யும் பாயசம் 'திக்'காக இருக்க வேண்டுமா? பாலை அப்படியே சேர்க்காமல், மிக்ஸியில் இரண்டு சுற்று சுற்றி நுரையுடன் சேருங்கள். பாயசம் 'திக்'காக இருக்கும். இதனுடன் இரண்டு டீஸ்பூன் Ôகண்டன்ஸ்டு மில்க்Õ அரைத்துச் சேர்த்தால் டேஸ்ட் அபாரமாக இருக்கும்.
- ===========================================================
எள்ளுருண்டை செய்வதற்கு முன் எள்ளை தண்ணீரில் அலசினால் கையில் ஒட்டிக் கொண்டு பாடாய் படுத்தி எடுத்துவிடும். பெரிய ஓட்டை உள்ள சல்லடை அல்லது வடிகட்டியில் எள்ளைப் போட்டு தண்ணீருக்குள் அமிழ்த்தி எடுத்தால் எளிதாக அலசி விடலாம்.

Offline MysteRy

பாத்திரம் துலக்குவதற்கு உப்புத் தண்ணீர்தான் கிடைக்கிறது என்றால், என்னதான் க்ளீனிங் பவுடர் அல்லது 'லிக்விட்' உபயோகித்தாலும் நுரையே வராது. இதனால் பாத்திரத்தை கழுவிய திருப்தியும் இருக்காது. க்ளீனிங் பவுடர் (அ) லிக்விடை சிறிது நல்ல தண்ணீரில் கரைத்து பாத்திரத்தைத் துலக்குங்கள். நன்றாக நுரை வருவதுடன் பாத்திரம் பளிச்சென பிரகாசிக்கும்.

Offline MysteRy

பீங்கான் தட்டுகள், கண்ணாடி பொருட்கள் போன்றவற்றை வரிசையாக அடுக்கும்போது கீறல் விழாமல் இருக்க, ஒவ்வொரு தட்டின் இடையிலும் டிஷ்யூ பேப்பரை வைத்து விடுங்கள். ஒன்றோடு ஒன்று உராயாமல் தட்டுகள் பாதுகாப்பாக இருக்கும்.

Offline MysteRy

தக்காளி குருமா, ரசம், கிரேவி போன்றவற்றைத் தயாரிக்க, தக்காளி விழுதுக்கு மிக்ஸியை பயன்படுத்தாமல், கேரட் துருவியைக் கொண்டு தக்காளியை மெதுவாக தேயுங்கள். விழுதுகள் எளிதாக கிடைத்துவிடும். தோலையும் தூக்கி எறிந்து விடலாம்.

Offline MysteRy



வாழைப்பழத்தை சீப்பாக வைத்திருக்கும்போது நன்கு பழுத்துவிட்டால், காம்பில்இருந்து தனித்தனியாக உதிர்ந்துவிடும். அதோடு, ஈ, சிறு கொசு போன்றவை மொய்க்க ஆரம்பித்துவிடும். இதைத் தவிர்க்க, செம்பழமாக இருக்கும்போதே சீப்பிலிருந்து காம்புடன் தனித்தனியாக பிரித்துவிடுங்கள். பழங்கள் பழுத்துவிட்டாலும், காம்புடன் இருப்பதால் ஈ மொய்க்காமல் சுகாதாரமாக இருக்கும். சீக்கிரத்தில் அழுகவும் செய்யாது. பிறருக்கு எடுத்துக் கொடுப் பதும் சுலபம்.

Offline MysteRy



பக்குவமாகச் செய்தாலும், ஊறுகாயில் பூஞ்சை காளான் வந்துவிடுகிறதா? கவலையை விடுங்கள். ஊறுகாயின் அளவுக்கேற்ப, சுத்தமாக உலர்ந்த பாட்டில் ஒன்றை எடுத்து, வெதுவெதுப்பான சூட்டில் இருக்கும் இரண்டு டீஸ்பூன் எண்ணெயை விட்டு, எல்லா இடங்களிலும் பரவும்படி செய்யுங்கள். பிறகு ஊறுகாயை நிரப்புங்கள். பூஞ்சை காளான் கிட்டே நெருங்காது.

Offline MysteRy



வெரைட்டி ரைஸ் தயாரிக்கும்போது, சாதத்தை உதிரியாகக் களறீயதும், ஒரு கரண்டியால் மேற்புறம் சிராக அழுத்தி விட்டு, மூடி வைத்து விடுங்கள். இதனால், நெடுநேரம் சூடாக இருப்பதுடன், சுவையும் குறையாமல் ஃபிரெஷ்ஷாகவும் இருக்கும்.

Offline MysteRy

பர்ஃபி, மைசூர்பாக் போன்ற ஸ்வீட்ஸ்  செய்யும்போது, கடாயின் அடியில் ஒட்டிக் கொண்டு எடுக்கவே வராது. அதைக் கரண்டியால் சுரண்டாமல், கடாயை மீண்டும் அடுப்பில் வைத்து, மிதமாக சூடு பண்ணி, லேசாகத் தேய்த்தால் ஒட்டிக் கொண்டிருப்பது சுலபமாகப் பெயர்ந்துவிடும்.

Offline MysteRy

காலையில் செய்த சாதம், பொரியல் மீந்து விட்டதா? இரண்டையும் நன்றாக மசித்து, வதக்கிய வெங்காயத்துண்டுகளை சேர்த்து கட்லெட்டாக செய்துவிடலாம். மாலை சிற்றுண்டி ரெடி!

Offline MysteRy

மாங்காய் தொக்கு வருடம் முழுவதும் சாப்பிட ஆசையா? இரண்டு மூன்று மாங்காய்களை தோல் சீவி துருவிக் கொள்ளுங்கள். இதனுடன் மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வெயிலில் நன்றாகக் காய வைத்து ஒரு பாட்டிலில் எடுத்து வைத்துவிடுங்கள். தேவைப்படும்போது, இதில்இருந்து சிறிது எடுத்து வெந்நீரில் ஊற வைத்து, வழக்கம்போல நல்லெண்ணெய் தாளித்து, தொக¢கு செய்து கொள்ளலாம்.