Author Topic: இவை...?  (Read 912 times)

Offline micro diary

இவை...?
« on: November 16, 2011, 02:41:37 PM »
காலத்தால் மாறாத
பக்கங்கள்..
ஆனால் வேதமல்ல..
இதயவுச்சி
கொண்டெழுதிய
அச்சரங்கள்..
அகாலமாய்
மரணமடையும்
மௌனங்கள்..
உயிர்த் திட்டுக்களில்
திடீரென வெடித்த
அசரீரிகள்..
வானத்து நிர்வாணங்களை
மூடி மூடி வைத்த மேகங்கள்
கலைந்த போது ஏற்பட்ட
கார்ப்புயல்கள்..
பனித்துளிகளை
கவ்விக் கொண்டோடிய
சூர்யோதயங்களின்
புன்முறுவல்கள்..
நறுமண புஷ்பங்களை
காயப்படுத்தாமல்
மிதமாய் வீசிய
இளந்தென்றல்கள்..

Offline Global Angel

Re: இவை...?
« Reply #1 on: November 16, 2011, 04:26:16 PM »
nalla kavithai thodaratum ungalpathivu ;)