Author Topic: ~ 30 வகை ஸ்வீட் - காரம் ~  (Read 2342 times)

Offline MysteRy

Re: ~ 30 வகை ஸ்வீட் - காரம் ~
« Reply #30 on: October 24, 2013, 06:15:13 PM »
பூசணிக்காய் ரோஸ்ட்



தேவையானவை:
பூசணிக்காய் - ஒன்று, ஆச்சி மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், ஆச்சி குழம்பு மிளகாய் மசாலா - 4 டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு - கால் டீஸ்பூன், இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன், கடலை மாவு, சோள மாவு, அரிசி மாவு, மைதா மாவு - தலா 2 டீஸ்பூன், நறுக்கிய மல்லித்தழை - சிறிதளவு, எண்ணெய், உப்பு, தண்ணீர் - தேவையான அளவு. 

செய்முறை:
சின்ன பூசணிக்காயை வட்டமாகவோ, சதுரமாகவோ கொஞ்சம் பெரிய சைஸ் ஆக வெட்டி வைத்துக்கொள்ளவும். ஆச்சி மஞ்சள்தூள், உப்பு, ஆச்சி குழம்பு மிளகாய் மசாலா, இஞ்சி - பூண்டு விழுது ஆகியவற்றை ஒன்றாக கலக்கி வெட்டி வைத்த பூசணிக்காயில் தடவி சிறிது நேரம் வைத்து, பின் அதில் எலுமிச்சைச் சாறு சேர்த்து புரட்டவும்.
கடலை மாவு, சோள மாவு, அரிசி மாவு, மைதா மாவு, உப்பு ஆகியவற்றை தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்துக்கு கரைக்கவும். இதில் மசாலாவில் ஊறிய பூசணிக்காயை முக்கி, ஆப்பச்சட்டியில் போட்டு, சுற்றிலும் எண்ணெய் விட்டு, பிறகு திருப்பிப் போட்டு பொன்னிறமானதும் எடுத்து, நறுக்கிய மல்லித்தழை தூவி அலங்கரித்து பரிமாறவும். டேஸ்ட்டில் அசத்தும் இந்த ரோஸ்ட்!