தேவையான பொருட்கள் :
பிரெட் -4 துண்டுகள்
வெங்காயம்- 1 / 2 கோப்பை
பச்சைமிளகாய்-1
கொத்தமல்லி- 2 தேக்கரண்டி
மைதா- 2 மேசைக்கரண்டி
அரிசிமாவு-3 மேசைக்கரண்டி
தயிர்-2 தேக்கரண்டி
உப்பு- கால்த்தேக்கரண்டி
செய்முறை :
மைதா,அரிசிமாவு, தயிர், உப்பு ஆகியவற்றில் சிறிது நீரைச் சேர்த்து கலக்கவும்.
மாவின் பதம் ஆப்பமாவு பதத்தில் கரைத்து குறைந்தது அரை மணி நேரம் ஊறவைக்கவும்.
பிறகு அதில் ஒரு பிரெட் துண்டை ஒரு பக்கம் மட்டும் தோய்த்து, தோய்த்த பக்கத்தை சூடாக்கிய தோசை தவாவில் போடவும்
பின்பு அதன் மேற்புறத்தில் வெங்காயம் பச்சைமிளகாய், கொத்தமல்லி ஆகியவற்றை நிரப்பி அதன் மீது மாவை பரவலாக ஊற்றவும்.
பிறகு அதை திருப்பி போட்டு சுற்றிலும் எண்ணெய் ஊற்றி சிவந்ததும் எடுத்து விடவும்.
இவ்வாறு அனைத்து துண்டுகளையும் செய்தது சட்னி அல்லது சாம்பாருடன் சூடாக பரிமாறவும். சுவையான பிரெட் ஊத்தப்பம் தயார்.