தேவையான பொருட்கள் :
வாழைக்காய்- இரண்டு
தயிர்-இரண்டு கோப்பை
நறுக்கிய பச்சைமிளகாய்-இரண்டு
தனியாத்தூள்-ஒரு தேக்கரண்டி
காய்ந்தமிளகாய்-இரண்டு
கடுகு-அரைதேக்கரண்டி
சீரகம்-ஒரு தேக்கரண்டி
வெந்தயம்-அரைதேக்கரண்டி
மஞ்சத்தூள்-அரைதேக்கரண்டி
பெருங்காயம்-ஒரு சிட்டிகை
கொத்தமல்லி-சிறிது
உப்பு-தேவைகேற்ப
எண்ணெய்-2tbsp
செய்முறை :
வாழைக்காயை தோல் சீவி சற்று கணமான துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
கடாயில் எண்ணெயை காயவைத்து அதில் கடுகு சீரகம் காய்ந்தமிளகாயைப் போட்டு பொரிக்கவும்.
பின்பு வெந்தயம் அதை தொடர்ந்து பெருங்காயம் பச்சைமிளகாய் தனியாத்தூள் மஞ்சத்தூள் ஆகியவற்றைப் போட்டு வதக்கி வாழைக்காய் துண்டுகளை போட்டு சிவக்க வதக்கவும்.
பின்பு அதில் தயிரை ஊற்றி உப்பைச் சேர்த்து நன்கு கலக்கி அடுப்பை மிதமாக வைத்து கொதிக்கவிடவும்.
மூடியைப் போட்டு குறைந்தது பதினைந்து நிமிடம் வைத்திருந்து இறக்கி கொத்தமல்லியைத் தூவி சூடாக சாதம் அல்லது சப்பாத்தியுடன் பரிமாறவும்.