Author Topic: ~ ஸ்பெஷல் உளுந்து முறுக்கு ~  (Read 885 times)

Online MysteRy

ஸ்பெஷல் உளுந்து முறுக்கு



தேவையானவை:
உளுத்தம்பருப்பு, பாசிப்பருப்பு - தலா கால் கப், பச்சை மிளகாய் - 3, பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், அரிசி மாவு - 2 கப், சீரகம், நெய் - தலா ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை:
உளுத்தம்பருப்பு, பாசிப்பருப்பில் ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து, குக்கரில் வைத்து வேக விடவும். தண்ணீரை வடித்துவிட்டு, பச்சை மிளகாய், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து நைஸாக அரைக்கவும். இதனுடன் அரிசி மாவு, சீரகம், நெய் சேர்த்துப் பிசையவும் (தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்க்கலாம்). முறுக்கு பிழியும் குழலில் தேன்குழல் அச்சினை வைத்து, பிசைந்த மாவைப் போட்டு, காய்ந்த எண்ணெயில் முறுக்காகப் பிழிந்து வேகவிட்டு எடுக்கவும்.