Author Topic: ~ அடடே' அக்கராகாரம் வேர் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.! ~  (Read 534 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227424
  • Total likes: 29050
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
அடடே' அக்கராகாரம் வேர் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.!




அக்கராகாரம் வேர் காற்றோட்டம் உள்ள இடங்களில் பரப்பி நன்கு உலர்த்தி, பதப்படுத்தப்பட்டு, மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. உலர்ந்த நிலையில் உள்ள இந்த வேர் நாட்டு மருந்துக் கடைகளில்  கிடைக்கும்.

தொண்டைக் கம்மல் குணமாக...
அக்கராகார வேரினை நீரில் அலசி சுத்தம் செய்துகொள்ள வேண்டும். அதில், தேவைக்கேற்ற அளவு எடுத்துக்கொண்டு அதனைச் சிறுசிறு துண்டுகளாக நறுக்க வேண்டும். அதனை ஒரு லிட்டருக்கு 75 முதல் 100 கிராம் என்ற வகையில் குடிநீரில் இட்டு சுமார் பத்து மணி நேரம் ஊறவைக்க வேண்டும். வேர்த்துண்டுகள் நன்கு ஊறிய ஊறல் நீரை வடிகட்டி வைத்துக்கொள்ள வேண்டும். அந்த ஊறல் நீரில் தினமும் இரு வேளையும் வாய் கொப்பளித்துவர வேண்டும். அல்லது ஒரு சிறிய வேர்த் துண்டை வாயில் வைத்து மென்றுவர வேண்டும். அக்கராகார வேரினை இவ்வாறு பயன்படுத்தி வருவதால் உள்நாக்கு வளர்ச்சி, தொண்டைக் கம்மல், நாக்கு அசைவற்றுப் போகுதல், காய்ச்சலினால் ஏற்படும் வறட்சி ஆகியவை நீங்கும்.

வலிப்பில் இருந்து விடுதலை பெற...
சுத்தம் செய்து உலர்த்திய அக்கராகார வேரினை நன்கு இடித்துத் தூளாக்கித் துணியால் சலித்து எடுத்துக்கொள்ள வேண்டும். இந்தத் தூளை மூக்கில் வைத்து உறிந்தால் காக்கை வலிப்பால் உண்டாகும் நரம்புப் பிடிப்பு குணமாகும்.

பல் வலி நீங்க...
அக்கராகார வேர்த் தூளை 30 கிராம் அளவு எடுத்துக்கொண்டு அதனை ஒரு லிட்டர் குடிநீரில் இட்டு, கால் லிட்டர் அளவு ஆகும் வரை நன்கு கொதிக்கவைக்க வேண்டும். காய்ச்சிய அந்த வேர்க் கஷாயத்தை வடிகட்டி, ஆறவைத்துக்கொள்ள வேண்டும். இதைப் பயன்படுத்தி ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வர வேண்டும். இதனால் பல் வலி நீங்குவதோடு பல் ஆட்டமும் குறையும். அதோடு வாய், தொண்டை ஆகியவற்றில் புண்கள் இருந்தாலும் குணமாகிவிடும்.