தேவையான பொருட்கள்
முட்டை - 2
கடலைமாவு – 1 /4 கப்
அரிசிமாவு – 4 தேக்கரண்டி
மைதா – 3 தேக்கரண்டி
சோடா உப்பு – ஒரு பின்ச்
மிளகாய்த்தூள் – 1 /2 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் – 1 /4 தேக்கரண்டி
சீரகம் – 1 /4 தேக்கரண்டி
உப்பு – 1 /4 தேக்கரண்டி
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
முட்டையை வேக வைத்து, தோலுரித்து, விருப்பமான வடிவில் வெட்டிக் கொள்ளவும்.
கொடுத்துள்ள பொருட்களில் கடலைமாவு முதல் உப்பு வரையுள்ள பொருட்களை, சிறிது தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும்.
வெட்டி வைத்திருக்கும் முட்டை துண்டுகளை, பஜ்ஜி மாவில் தோய்த்து , சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.