Author Topic: உளுத்தம்பருப்பு முறுக்கு  (Read 631 times)

Offline kanmani

தேவையான பொருட்கள்

    அரிசி மாவு  -  4 கப்
    உளுத்தம்பருப்பு  – 1 கப்
    மிளகாய்தூள்  – 1 மேசைக்கரண்டி
    சீரகம் – 1 /2  தேக்கரண்டி
    வெள்ளை எள் – 1 / 2  தேக்கரண்டி
    வெண்ணெய்  – 1 மேசைக்கரண்டி
    எண்ணெய் – பொரிப்பதற்கு

செய்முறை

    உளுத்தம்பருப்பை லேசாக பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.
    ஆறிய பின்பு  அரைத்துக் கொள்ளவும்.
    வெண்ணையை உருக்கி கொள்ளவும்.
    அரிசி மாவு, உளுத்தம்பருப்பு மாவு, மிளகாய்தூள், சீரகம், வெள்ளை எள், வெண்ணெய் அனைத்தையும்
    ஒன்றாக கலந்து  சிறிது தண்ணீர் கலந்து கெட்டியாகப்   பிசைந்து கொள்ளவும்.
    கடாயில் எண்ணெய் காய வைக்கவும்.
    பிசைந்த மாவை முறுக்கு அச்சில் போட்டு எண்ணெயில் பிழிந்து  இரண்டு  பக்கமும் பொரித்து எடுக்கவும்.

குறிப்பு
காரம் வேண்டாதவர்கள் மிளகாய்த்தூள் சேர்க்க வேண்டாம்.