Author Topic: கை முறுக்கு  (Read 512 times)

Offline kanmani

கை முறுக்கு
« on: October 18, 2013, 10:43:33 AM »
தேவையான பொருட்கள்

    அரிசி மாவு – 4 கப்
    உளுத்தம் மாவு – 1/2  கப்
    மிளகுத்தூள் – 1/2 தேக்கரண்டி
    சீரகத்தூள் – 1/2 தேக்கரண்டி
    வெண்ணெய் / நெய் – 200 கிராம்
    உப்பு – தேவையான அளவு

செய்முறை

    உளுத்தம்பருப்பை வெறும் வாணலியில் வாசம் வரும் வரை வறுத்துக் கொள்ளவும். வறுத்த உளுத்தம்பருப்பை மிக்ஸ்யில் நன்கு அரைத்து, சலித்துக் கொள்ளவும்.
    இதனுடன் அரிசி மாவு, உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
    நெய்யை ஒரு பாத்திரத்தில் சேர்த்து கையால் நன்கு தேய்த்துக் கொள்ளவும். இதனுடன் மாவு கலவையை சேர்த்து நன்கு பிசறிக் கொள்ளவும்.
    மாவை 3 அல்லது 4 பகுதிகளாக பிரித்துக் கொள்ளவும்.
    முதலில் ஒரு பகுதி மாவை மட்டும் எடுத்து திக்காக பிசைந்து கொள்ளவும்.
    ஒரு ஈரத் துணியின் நடுவில் ஒரு பாட்டில் மூடியை வைத்துக் கொள்ளவும். ஒரு எலுமிச்சம்பழ அளவு உருண்டையை எடுத்துக் கொள்ளவும்.
    கட்டை விரல், ஆள்காட்டி விரல் மற்றும் நடுவிரல் ஆகிய மூன்று விரல்களைக் கலந்து முறுக்கினை சுற்றவும்.
    கட்டை விரலாலும், ஆள்காட்டி விரலாலும் மாவினை சிறிது அழுத்திவிட்டு, பிறகு அதனைத் திருகி திருக்கி பாட்டில் மூடியைச் சுற்றிலும் சுற்றி விடவும்.
    இந்த வகை முறுக்கினை மிகவும் மெல்லியதாக சுற்றக் கூடாது. தேவையான அளவிற்கு சுற்றுகளின் எண்ணிக்கையை கூடவோ, குறைத்தோ சுற்றிக் கொள்ளலாம்.
    கடாயில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானதும் சுற்றி வைத்துள்ள முறுக்கை கவனமாக

    எடுத்து, எண்ணெயில் இட்டு பொரித்தெடுக்கவும்.
    இதே போல் அடுத்த பகுதி மாவை எடுத்து பிசைந்து, சுற்றி, பொரித்து எடுக்கவும்.
    சுவையான கை முறுக்கு தயார்