Author Topic: பூரி, உருளைக்கிழங்கு மசாலா  (Read 447 times)

Offline kanmani

சுவையான பூரி, உருளைக்கிழங்கு மசாலா செய்வதற்கான எளிய குறிப்பு.
தேவையான பொருட்கள்

    கோதுமை மாவு – 2  கப்
    தண்ணீர் – 1/4 – 1 /2 கப்
    உப்பு – 1 /2 தேக்கரண்டி
    எண்ணெய்

மசாலா தயாரிக்க

    உருளைக்கிழங்கு – 3
    பெரிய வெங்காயம் – 1
    பச்சை மிளகாய் – 4
    இஞ்சி, பூண்டு விழுது – 1  தேக்கரண்டி
    மஞ்சள்தூள் – 1 /2 தேக்கரண்டி
    கடுகு – 1 /2 தேக்கரண்டி
    கருவேப்பிலை – சிறிது
    உப்பு

பூரி செய்முறை

    கோதுமை மாவை ஒரு அகலமான பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். அதனுடன் 2  தேக்கரண்டி எண்ணெய் மற்றும் உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
    பின் தண்ணீர் சேர்த்து கெட்டியாக நன்கு பிசைந்து கொள்ளவும். சப்பாத்தி மாவு பதத்தை விட கெட்டியாக இருக்க வேண்டும்.
    பிசைந்தவுடன் உடனடியாக பூரி செய்ய வேண்டும். அதிக எண்ணெய் இல்லாமல் பூரி செய்ய வேண்டும் எனில், மாவு பிசைந்தவுடன் பூரி போட வேண்டும்.
    சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, பூரி கட்டையை பயன்படுத்தி தட்டையாக, சிறிது தடிமனாக தேய்த்துக் கொள்ளவும்.
    பூரி சிறிது தடிமனாக இருக்க வேண்டும். மெல்லிசாக இருக்கக் கூடாது.
    பூரி பொரிப்பதற்கு தேவையான எண்ணையை கடாயில் ஊற்றி சூடு செய்யவும்.எண்ணெய் சூடானதும், பூரியை போடவும்.
    பூரி அடியில் இருந்து மேலே வரும் போது, பூரியை கரண்டியால் எண்ணைக்குள் அமிழ்த்தினால்  பூரி உருண்டையாக வரும்.
    பூரியை மறுபுறம் திருப்பி லேசாக பொன்னிறமானதும் எடுத்து விடவும்.

மசாலா செய்முறை

    உருளைக்கிழங்கு தோலை சீவி விட்டு, 3 அல்லது 4 துண்டுகளாக நறுக்கி குக்கரில் போட்டு 3 விசில்கள் வரை வேக விடவும்.
    வேக வைத்த உருளைகிழங்கை லேசாக மசித்துக் கொள்ளவும்.
    வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.
    கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு சேர்த்து தாளிக்கவும். கடுகு வெடித்ததும் கருவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
    பின் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
    பின் மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கு,மஞ்சள்தூள், உப்பு, தண்ணீர் சேர்த்து மூடி போட்டு இரண்டு நிமிடங்கள் வேக வைக்கவும்.

குறிப்பு
அதிக மசால் வேண்டும் எனில் கடலை மாவை தண்ணீரில் கரைத்து மசாலில் ஊற்றி கொதிக்க விடவும் அல்லது பொட்டுக்கடலையை அரைத்து, மசாலில் ஊற்றி கொதிக்க விடவும்.