Author Topic: பைனாப்பிள் கேசரி  (Read 493 times)

Offline kanmani

பைனாப்பிள் கேசரி
« on: October 18, 2013, 09:33:35 AM »

சுவையான பைனாப்பிள் கேசரி செய்வதற்கான எளிய குறிப்பு.
தேவையான பொருட்கள்

    வெள்ளை ரவை – 1  கப்
    பைனாப்பிள் – 1 கப்
    நெய் – 1 /2 கப்
    சர்க்கரை – 1 1 /2 – 2  கப்
    தண்ணீர் – 3  – 3 1 /2 கப்
    ஏலக்காய்தூள் – சிறிது
    பைனாப்பிள் எசன்ஸ் – சிறிது
    முந்திரிபருப்பு , பாதாம், பிஸ்தா – சில

செய்முறை

    ஒரு அடி கனமான பாத்திரத்தில் 2  மேசைக்கரண்டி நெய் ஊற்றி சூடு செய்யவும்.
    ரவையை அதில் சேர்த்து லேசாக நிறம் மாறும் வரை வதக்கி தனியே வைக்கவும்.
    அதே கடையில் 2  மேசைக்கரண்டி நெய் ஊற்றி முந்திரி, பாதாம், பிஸ்தா ஆகியவற்றை லேசாக பொன்னிறமாகும் வரை வதக்கிக் கொள்ளவும். கடாயில் இருந்து வெளியே எடுத்து சிறு சிறு துண்டுகளாக உடைத்துக் கொள்ளவும்.
    அதே பாத்திரத்தில் தண்ணீர்( 3  – 3 1 /2 கப் ) ஊற்றி 5  நிமிடங்கள் சூடு செய்யவும். பின் அதில் பைனாப்பிள் துண்டுகள், சிறிது  கேசரி பவுடர் சேர்த்து வேக விடவும்.
    வெந்ததும், ரவையை சிறிது சிறிதாகச் சேர்த்து கட்டிகள் விழாமல் கிளறிக் கொண்டேயிருக்க வேண்டும்.
    ரவை வெந்ததும், அதனுடன் சர்க்கரை சேர்த்து கிளறிக் கொண்டேயிருக்கவும்.
    கடைசியாக மீதமுள்ள நெய், பைனாப்பிள் எசன்ஸ் சேர்த்து நன்கு கலக்கவும்.
    இறுதியாக வறுத்து, உடைத்து வைத்துள்ள அனைத்து பருப்புகளையும் சேர்த்து பரிமாறவும்.